Man Aman Singh Chhina
லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களின் விலகல் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2020 இல் மோதல் தொடங்கிய பின்னர் இரு படைகளும் தங்களால் அடைய முடியாத பகுதிகளில் 'ஒருங்கிணைந்த' ரோந்துப் பணியை இனிமேல் தொடங்கும் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆங்கிலத்தில் படிக்க: India, China disengagement in Ladakh’s Depsang, Demchok to be completed today
இந்த இரண்டு பகுதிகளிலும் உள்ள தற்காலிக கட்டமைப்புகளை அகற்றும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இரு தரப்பிலும் ஒரு குறிப்பிட்ட அளவு சரிபார்ப்பு ஏற்கனவே நடந்துள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சரிபார்ப்பு செயல்முறை நேரடி ரீதியாகவும், ஆளில்லா வான்வழி வாகனங்களைப் (UAVs) பயன்படுத்தியும் செய்யப்படுகிறது.
இரு தரப்பிலும் உள்ள துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டு, எல்லையில் இருந்து வெகு தொலைவில் நிறுத்தப்படுவது விலகல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது. ஏப்ரல் 2020 முதல் இதுவரை அணுக முடியாத இடங்களுக்கு ரோந்து பணி மேற்கொள்ளப்படும், இது 10 முதல் 15 வீரர்களைக் கொண்ட சிறிய துருப்புக்களால் செய்யப்படும்.
பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் இரு படைகளின் அதிகாரிகளின் முன்னிலையிலும் விலகல் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் உள்ள தற்காலிக கட்டமைப்புகள் சீனர்களால் அகற்றப்பட்டதை பொது களத்தில் உள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு சீன ஊடுருவலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவும் சீனாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வாரம், டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் எட்டப்பட்டதாக இந்தியா அறிவித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, பெய்ஜிங் அதை உறுதிப்படுத்தியது, “சீன மற்றும் இந்திய எல்லைப் படைகள் உரிய பணிகளில் ஈடுபட்டுள்ளன, இது தற்போது சுமூகமாக நடந்து வருகிறது".
சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த ரோந்துப் பணி அடுத்த இரண்டு நாட்களுக்குள் தொடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பிலும் முன் தகவல் தெரிவிக்கப்படுவதால், நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அபாயம் இல்லை.
இதேபோன்ற ஏற்பாடு அருணாச்சல பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அங்கு யாங்ட்சே, அசாபிலா மற்றும் சுபன்சிரி பள்ளத்தாக்குகளில் முன்னர் மோதல் உருவானது, என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
டெப்சாங்கில், இந்தியப் படைகள் ரோந்துப் புள்ளிகளுக்குள் நுழைவதை சீனர்கள் தடுத்தத நிலையில், தற்போது சுமூக நிலைப்பாடு உள்ளதால் இந்தியப் துருப்புக்கள் இப்போது ‘தடுப்பு’ பகுதிக்கு அப்பால் ரோந்து செல்ல முடியும். டெம்சோக்கில், இந்திய துருப்புக்கள் இப்போது ட்ராக் ஜங்ஷன் மற்றும் சார்டிங் நுல்லாவில் உள்ள ரோந்துப் புள்ளிகளுக்குச் செல்ல முடியும்.
எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டில் மோதல் ஏற்பட்ட பின்னர் அதிக எண்ணிக்கையிலான இந்திய துருப்புக்கள் லடாக்கிற்கு விரைந்தன, சீன எல்லை ரோந்து பொறிமுறையில் பரந்த ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை தொடர்ந்து இருக்கும் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பரஸ்பர நம்பிக்கை மற்றும் சரிபார்ப்புக்கான சூழல் உருவாகும் வரை, எதிர்காலத்தில் லடாக்கிலிருந்து எந்தவொரு துருப்புக்களையும் திரும்பப் பெறுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“