மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாட்டு சந்திப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வரை சீனா உறுதி செய்யாமலேயே இருந்த வந்தது.
மேலும், படிக்க மாமல்லபுரம் சந்திப்பு : இந்தியாவுக்கான சீன தூதர் சூசக ட்வீட்
ஆனால், இந்த சஸ்பென்சை தற்போது முடித்து வைத்துள்ளது சீனா. கடந்த 24 மணி நேரங்களில் சீனா அதிபரின் அக்டோபர் 11, 12 வருகையை அதிகாரப் பூர்வமாக இந்தியாவிடம் பகிர்ந்துள்ளது. இன்று (அக்டோபர் 9), இரு நாடுகளும் இது குறித்த தகவலை நாட்டு மக்களுக்கு வெளியிடுவார்கள் என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் கருத்து தெரிவிக்கிறது .
முரண்பாடுகள் வந்த விதம் :
கடந்த வாரங்களில் பாகிஸ்தானுக்கான சீன தூதர், "காஷ்மீர் மக்களின் நீதிக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் சீனா பணியாற்றும்" என்னும் முரண்பாடான தகவலை அளித்திருந்தார். ஏனெனில், இதற்கு முன்பு காஷ்மீர் மக்களுக்காக சீனா போராடும் என்பது சீனாவின் கொள்கையில் இல்லாத ஒன்றாக இருந்தது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் ஹிம்கிரி இராணுவ பயிற்சியையும் சில நாட்களுக்கு முன் சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை மந்திரி எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்
பாகிஸ்தானுக்கான சீனா தூதர்
இந்த கருத்துக்கு இந்தியாவின் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனா காஷ்மீர் விசஷயத்தில் தனது பாதையை மாறி செல்கிறதா? என்ற கேள்வியும் இந்தியா தரப்பில் முன் வைக்கப்பட்டது. சீனா அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்திற்கு சுற்றுப் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில், இந்த முரண்பாடும் இரு நாடுகளுக்கு இடையில் வளர ஆரம்பித்தது. மேலும், சீன அதிபரின் வருகையை அதிகாரப் பூர்வமாக நேற்று வரை உறுதிபடுத்தாமல் இருந்ததால் சற்று பதட்டமும் தென்பட்டது.
முரண்பாடு எவ்வாறு தணிய ஆரம்பித்தது:
சீனா அதிபர் மாமல்லபுரம் சுற்றுப்பயணம் நெருங்கி வரும் வகையில், இந்த கருத்து பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகளில் சீனா தரப்பில் இருந்து சில முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
உதாரணாமாக, நேற்று (அக்டோபர், 8 ) செய்தியாளர்களைச் சந்தித்த சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் , "காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உரையாடலின் மூலம் காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளையும் சரி செய்து உறவுகளை மேம்படுத்தவே சீனா விளைகிறது" என்று தெரிவித்திருக்கிறார் . இதில், 'காஷ்மீர் சர்வேதச பிரச்னையை, ஐ.நா மூலம் தான் தீர்க்கப்பட வேண்டும்' என்ற வாசகங்கள் இல்லாமல் இருந்ததால் சீனாவின் மன நிலையில் மாற்றம் வந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்
மேலும் , இந்தியாவுக்கான சீனா தூதர் சன் வீடோங் கடந்த திங்கக்கிழமை வெளியிட்ட டுவீட்டில், "வுஹான் உச்சிமாநாட்டில் கிடைத்த உத்வேகத்தின் பயன்படுத்தி, இரு நாடுகளுக்குள் இடையிலான அனைத்து மட்டங்களுக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், நட்புறவை வலுபடுத்தவும் தயராகி வருகிறோம்” என்று பதிவு செய்திருந்தார்.
அடுத்து, கடந்த கடந்த செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 8 ) இந்திய மக்களுக்கு, விஜய தசமி வாழ்த்துக்களையும் பதிவு செய்தார்.
மேலும், இன்று (அக்டோபர், 9) காலை 7.30 மணியளவில், அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் , " சர்வேதச அரசியல் சூழ்நிலை நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் களங்களில் , இந்தியாவும், சீனாவும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் நாம் உருவாக்கிய பஞ்சசீல ஒப்பந்தம் எப்படி சர்வேதச நாடுகளுக்கு வழிகாட்டியாய் இருந்ததோ அதுபோல் வரும் காலங்களில் நமது உறவுகள் வலுப்பெற வேண்டும் " என்று பதிவு செய்துள்ளார்.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்குள் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்பது பஞ்சசீல (ஐந்து கோட்பாடு ) ஒப்பந்தத்தின் முக்கிய கோட்பாடாகும். காஷ்மீர் விஷயங்களில் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாய் இந்த டுவீட் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.