இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் முடிவில், எல்.ஏ.சி பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் இருந்த பிரச்சனைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் எனத் இந்தியா கூறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India-China LAC Agreement: What this means, why experts are advising caution
இந்த ஒப்பந்தம் கூறும் தகவல்கள் மற்றும் வல்லுநர்களின் கூற்று குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ரோந்து பணிகள் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த திங்களன்று வெளியானது. அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும், ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், இந்த வாரம் முழுவதும் வெளியான அறிவிப்புகளில் ரோந்து பணி ஒப்பந்தம் குறித்து சீனா கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* கடந்த ஏப்ரல் மாதம் நியூஸ்வீக் இதழுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்தியாவை பொறுத்தமட்டில், சீனாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார். மேலும், இருநாட்டுக்கும் இடையே இருக்கும் எல்லை தொடர்பான பிரச்சனையை விரைந்து தீர்க்க வேண்டுமெனவும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
* பிரதமர் மோடியின் இக்கருத்துக்கு சீனாவிடமிருந்து சாதகமான பதில் பெறப்பட்டது. எல்லைகளைக் கடந்து சீனா மற்றும் இந்தியாவின் உறவு பரந்து இருப்பதாகவும், தூதரக மற்றும் ராணுவ தளவாடங்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியுமெனவும் சீனா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
* இதேபோல், லடாக் எல்லைப் பகுதியில் சீனா மற்றும் இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் தீர்வு காணப்படுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மே மாதம் கூறியிருந்தார். குறிப்பாக, ரோந்து பணிகள் தொடர்பான பிரச்சனை தான் முதன்மையானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எல்லைப் பகுதியில் ரோந்து பணிகள்
திங்களன்று வெளியான அறிவிப்பில், ரோந்து பணி தொடர்பான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா மற்று சீனா இடையே எல்லை நிர்வாகத்தின் முக்கிய கூற்றாக பார்க்கப்படுவது ரோந்து பணி. தரைமட்டத்தில் அதற்கான கோடுகள் வரையறுக்கப்படாததால், தளத்திற்கு திரும்புவதற்கு முன்பாக தங்கள் பார்வைக்கு எட்டியவரை இந்திய வீரர்கள் ரோந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ரோந்து செல்லும் வீரர்கள் தங்களின் இருப்புக்கான அடையாளத்தை அப்பகுதியில் விட்டுச் செல்வது வழக்கம். இவை காலியான சிகரெட் அட்டை அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டியாகக் கூட இருக்கலாம்.
கடந்த 2005-ஆம் ஆண்டு எல்லை ஒப்பந்தத்தின் 4-ஆம் பிரிவின் படி, இருநாட்டு வீரர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் பட்சத்தில், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளன:
* அதன்படி, இரு நாட்டு வீரர்களும் எல்லை பகுதியில் சந்தித்துக் கொண்டால் அவர்கள் தங்கள் சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல், நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.
* நேருக்கு நேர் சந்திக்கும் போது இரு நாட்டினரும், தங்கள் பலத்தை மற்றவர்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. மேலும், மற்றொரு நாட்டு வீரர்களை மிரட்டக் கூடாது.
* இருதரப்பினரும் ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மிரட்டல் விடுக்கும் விதமாக நடந்து கொள்ள கூடாது.
* அப்பகுதியில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக செயல்படக் கூடாது; தங்கள் இருப்பைக் காண்பிக்கும் பொருள்களை வைக்க கூடாது
ஒப்பந்தத்தின் வரையறைகள்:
ஒப்பந்தத்தின் படி, டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் பிராந்தியத்தில் இருநாட்டு வீரர்களும் ரோந்து பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. அதன்படி, இந்திய வீரர்கள் டெப்சாங்கின் 10 முதல் 13 புள்ளிகள் மற்றும் டெம்சாக்கின் சார்டிங் நுல்லா வரையிலும் ரோந்து செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
ரோந்து பணி ஒப்பந்த அடிப்பையில், இரு படையினரும் நிறுத்தி வைத்துள்ள 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை துருப்பு வீரர்களும் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் இன்னும் 10 நாள்களில் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது
இந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரோந்து ஏற்பாடுகள் குறித்து வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளார்.
*அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் இருந்த நிலை மீட்டெடுக்கப்படும். மேலும், நிலுவையில் உள்ள இடங்களில் ரோந்து மற்றும் மேய்ச்சல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுவதாகவும், மற்ற இடங்களில் 2020-க்கு முந்தைய நிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.
*கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோவின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகள் போன்ற பகுதிகளின் நிலை குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
*2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய வெளியுறவு செயலர் மிஸ்ரி, அது போன்ற தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மோதல்களை தவிர்க்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
* முதலில், துருப்புகளின் நீக்கத்தில் செயலாற்றுவதாகவும், அதன்பின்னர், விரிவாக்கம் மற்றும் தூண்டுதல் தொடர்பான பேச்சுவார்த்தை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
* ரோந்து பணி குறித்த ஒப்பந்தம், இரு நாட்டின் எல்.ஏ.சி நிலையை எளிமையாக்க வழிவகுக்கும் என மிஸ்ரி கூறியுள்ளார். ஒப்பந்தத்தின் படி இரு தரப்பினரும் செயல்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:
எனினும், இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக தெரிகிறது.
* இந்திய-சீனா எல்லைப் பகுதிகளில் 2020-ல் எழுந்த பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண சமீபத்திய ஒப்பந்தம் அமையும் பிரதமர் மோடியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் அறிக்கையில், எல்லை பிரச்சனைகளை தீர்ப்பதில் இருதரப்பிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை இரு நாட்டுக்கும் இடையே வழக்கமாக இருந்த வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நிலையை இந்தியா கையாண்டது. ஆனால், இருதரப்பு உறவு எல்லை பிரச்சனையால் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் சீனா இருந்தது.
இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட பின்னர், இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்லைப் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்பார்கள் எனவும், இதன் மூலம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பரஸ்பர முடிவு எட்டப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகவும், நிலையான வளர்ச்சி ஏற்பட முந்தைய உறவுமுறையை புதுப்பிக்கும் வகையில் இது அமையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ரோந்து பணி ஒப்பந்தம் ஒரு நாட்டுக்கும் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவது போன்று அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இரு தரப்பினரும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் படி செயல்பட்டால், இரண்டு ஆண்டுகளில் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை அறிந்து கொள்ள பொறுத்திருந்த காண வேண்டியது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.