India - China military strength : 2020ம் ஆண்டின் சர்வதேச அதிக ராணுவ வலிமை உள்ள நாடுகளின் பட்டியலில், 3ம் இடத்தில் சீனாவும், 4ம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கடுத்த இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.
India - China military strength : 2020ம் ஆண்டின் சர்வதேச அதிக ராணுவ வலிமை உள்ள நாடுகளின் பட்டியலில், 3ம் இடத்தில் சீனாவும், 4ம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கடுத்த இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.
இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம், இருநாடுகளுக்கிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Advertisment
கல்வான் பள்ளத்தாக்கு பகுதி சீனாவுக்கு சொந்தமானது என்றும், இந்தியப்படைகள் இரண்டுமுறை அத்துமீறி இந்த பகுதியில் நுழைந்ததாலேயே, தாக்குதல் நடத்தப்பட்டதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,இந்த விவகாரத்தில், ராணுவத்தினருக்கு எவ்வித முடிவையும் எடுக்கவும், ஊடுருவல்காரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம் தொடர்பாக, இந்திய - சீன அதிகாரிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துவக்கியுள்ள நிலையில், இருநாடுகளும் எல்லையில் படைகள் குவித்துவருகின்றன. எந்நேரமும் போர் மூளலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து வரும் நிலையில், போருக்கு இவ்விரு நாடுகளும் எவ்வாறு தயாராகி உள்ளன? அவர்களின் ராணுவ வலிமை என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்....
Advertisment
Advertisements
2020ம் ஆண்டின் சர்வதேச அதிக ராணுவ வலிமை உள்ள நாடுகளின் பட்டியலில், 3ம் இடத்தில் சீனாவும், 4ம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கடுத்த இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.
ராணுவத்தில் ஆள்பலம் : இந்திய ராணுவத்தில் 622,480,340 படைவீரர்கள் உள்ளனர். சீனாவில் இதன் மதிப்பு 752,855,402 ஆக உள்ளது.
இந்திய ராணுவத்தில் செயலில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கை 1,444,000 ஆக உள்ள நிலையில், சீனாவில் இதன் விகிதம் 2,183,000 ஆக உள்ளது.
இந்திய ராணுவத்தில் இருப்பு படைவீரர்களின் எண்ணிக்கை 2,100,000 என்ற அளவில் உள்ளனர். சீனாவில் இதன் எண்ணிக்கை 510,000 ஆக உள்ளது.
விமானப்படையின் பலம் : இந்திய விமானப்படையில், 538 போர் விமானஙகள், 700க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் என 2,123 விமானங்கள் உள்ளன. சீன ராணுவத்தில் 1200 போர் விமானங்கள், 900க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் என 3,210 விமானங்கள் உள்ளன.
தரைப்படை தாக்குதல் ஆயுதங்கள் : இந்தியாவை ஒப்பிடும்போது, தரைப்படை தாக்குதல் ஆயுதங்கள் அதிகளவிலேயே உள்ளன. 3,500 டாங்குகள், 3,800 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள், 3,600 பீரங்கிகள், 2,650 ராக்கெட் ஏவுகணைகள் என மொத்தம் 33 ஆயிரம் ராணுவ கவச வாகனங்கள் சீனாவிடம் உள்ளன.
இந்தியாவிடம் 4,292 டாங்குகள், 235 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள், 4,060 பீரங்கிகள், 266 ராக்கெட் ஏவுகணைகள் என 8,686 ராணுவ கவச வாகனங்களே உள்ளன.
கப்பற்படையின் வலிமை
இந்திய கப்பற்படையில், விமானங்களை தாங்கிச்செல்லும் கப்பல் ஒன்று, 16 நீர்மூழ்கி கப்பல்கள், 10 எதிரிகளின் மறைவிடங்களை அழிக்கவல்ல கப்பல்கள், 13 பீரங்கிக்கப்பல்கள், 19 சிறியவகை போர்க்கப்பல்கள், 19 போர்க்கப்பல்கள், மற்றும் 139 கடலோர ரோந்து வாகனங்கள் என 285 கப்பல்கள் உள்ளன.
சீனா தரப்பில், விமானங்களை தாங்கிச்செல்லும் கப்பல்கள் இரண்டு, 74 நீர்மூழ்கிகப்பல்கள், 36 தடைகளை அழிப்பான்கள், 52 பீரங்கிக்கப்பல்கள், 50 சிறியவகை போர்க்கப்பல்கள், 29 போர்க்கப்பல்கள், 220 ரோந்து வாகனங்கள் என 777 கப்பல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil