இந்திய - சீன அதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள லடாக்கின் கல்வான். ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படைகளை திரும்ப பெற்றுக்கொள்ள இருநாடுகளும் முன்வந்துள்ளன.
எல்லைகளிலிருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து தற்போது பேச்சளவிலேயே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ஏற்படும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையேயான அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், உடனடியாக இருநாடுகள் படைகளையோ, பாதுகாப்பிற்காக நிற்கவைக்கப்பட்டுள்ள ஆயுத தளவாடங்களையோ உடனடியாக அகற்றுவது என்பது முடியாத காரியம் என்றும், இது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துவிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இரு நாடுகளின் ராணுவத்துறை அதிகாரிகள், புதன்கிழமை ( ஜூன் 10ம் தேதி) சந்தித்துப்பேச உள்ளனர்.
இருநாட்டு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை எளிதில் முடிந்துவிடக்கூடிய காரியம் அல்ல. முழுமையான சரிபார்ப்பு, செயற்கைக்கோள் உதவியிலான கண்காணிப்பு உள்ளிட்டவைகளை பொறுத்தே, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் என்பது ஏற்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒருமாதகாலமாக, எல்லைப்பகுதியில், இருநாடுகளும் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், தற்போது படைகளை திரும்பப்பெற சம்மதம் தெரிவித்துள்ளன.
ஜூன் 6ம் தேதி, 14ம் படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கிற்கும், தெற்கு ஜின்ஜியாங் ராணுவ மாவட்ட கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின்னிற்கும் இடையே 3 மணிநேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, ரோந்துப்பகுதிகளான , , பங்காங் சோ ற்றம் சிசுல் பகுதியில் உள்ள படைகளை திரும்பபெற சீனா ஒத்துக்கொண்டுள்ளது.
எல்லைப்பகுதியில் இந்திய படையினரின் ரோந்து நடவடிக்கைக்கு பல்வேறு பகுதிகளில் சீனா அனுமதிப்பதில்லை இதுமேலும் பதற்றத்தையே உருவாக்கும். அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் இணைந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சீன எல்லைப்பகுதியில், சீனப்படைகள் அதிகளவில் ஊடுருவி தாக்குதலுக்கு பயன்படும் வெடிகுண்டுகள், ராக்கெட்கள், விமானதாக்குதலுக்கு தேவையான ரேடார்கள் உள்ளிட்டவைகளை நிலைநிறுத்தியுள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இருந்தே எல்லைப்பகுதியில், சீனா அதிகளவில் படைகளை குவித்து வந்துள்ளது. அந்த படைகளை சீனா திரும்பப்பெற்று எல்லையில் அமைதி முயற்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 நாட்களில், டிவிசன், பிரிகேட், பட்டாலியன் அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் முடிவு எடுக்கப்படாதபட்சத்தில், கமாண்டர்கள் அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையினிடையே, இந்திய எல்லையை ஒட்டி நடைபெற்று வரும் Darbuk-Shyok-Daulat Beg Oldie (DSDBO) road திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள் தரப்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும்நிலையில், இருநாட்டு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும், கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் அறிவுரையின் பேரில் நடைபெற்றுள்ளது.
இந்திய - சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க, மத்திய அரசின் முப்படைகளின் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்டவைகள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு, உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்பதை மறுத்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில், வடக்கு ராணுவ கமாண்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடு சிறப்பாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.