ஒரே மகன் ராஜேஷ் ஓரங்கை நாட்டுக்காக இழந்த தந்தை: உருக்கமான பேட்டி
India china dispute deaths : எதிரிகள் உடனான சண்டையில் என் மகன் இறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்திய நாட்டுக்கு எதிராக எதிரி ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் சண்டையிலேயே தன் மகன் வீரமரணம் அடைந்துள்ளான்.
ராஜேஷ் ஓரங், மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தை சேர்ந்த ஓரங் குடும்பத்திலிருந்து ராணுவத்திற்கு சென்ற முதல் வீரர் ஆவார். இந்திய எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களில்,ராஜேஷ் ஓரங்கும் ஒருவர்.
Advertisment
ராஜேஷின் தந்தை சுபாஷ் ஓரங். பிர்பூம் மாவட்டத்தின் பெல்காரியா கிராமத்தில், விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்கள் பழங்குடியினர் ஆவர்.
எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் ராஜேஷ் ஓரங் மரணமடைந்தது குறித்து அவரது தந்தை சுபாஷ் ஓரங் கூறியதாவது, நேற்று, ராணுவ தலைமையகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில், தனது மகன் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சீன ராணுவத்துடனான சண்டையில் என் மகன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிரிகள் உடனான சண்டையில் என் மகன் இறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்திய நாட்டுக்கு எதிராக எதிரி ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் சண்டையிலேயே தன் மகன் வீரமரணம் அடைந்துள்ளான்.
சுபாஷ் ஓரங் மேலும் கூறியதாவது, ராஜேஷ், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஊருக்கு வந்திருந்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் போனில் தொடர்பு கொண்டு பேசுவான். 14ம் தேதி பேசும்போது கூட, எல்லையில் பெரும்பதற்றமாக இருந்தது என்று கூறியிருந்தான், அதன் காரணமாக அவனால் எங்களோடு நீண்டநேரம் பேசமுடியவில்லை. தற்போது ஊரடங்கு நிலவிவருவதால், அவனால் ஊருக்கு வர இயலாத நிலையில் உள்ளதாக சுபாஷ் ஓரங் கூறியுள்ளார்.
ராஜேஷ் ஓரங்கிற்கு 2 சகோதரிகள் உள்ளனர். அவர்கள் ராஜேஷைவிட வயதில் மூத்தவர்கள் ஆவர். அந்த குடும்பத்தை, சுபாஷிற்கு தாங்கி பிடிக்கும் ஆள் ராஜேஷ் தான். 2015ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ராஜேஷ், தற்போது பீகார் 16வது ரெஜிமெண்டில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil