ஆற்று பகுதியில் சாலை அமைப்பதை நிறுத்துங்கள்- இந்தியாவை எச்சரிக்கும் சீனா

இந்திய மற்றும் சீன எல்லைப் பிரிவு இராணுவத் தளபதிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சுவார்த்தையில்  எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்திய மற்றும் சீன எல்லைப் பிரிவு இராணுவத் தளபதிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சுவார்த்தையில்  எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, “தேவையான எதிர் நடவடிக்கைகள்” எடுக்கபடும் என்று பெய்ஜிங்  இந்தியாவை எச்சரித்தது. சீன-இந்திய எல்லைப் பகுதியில்,சீன எல்லைப் படையினரின் ரோந்து பணிக்கு தடையாக இருப்பதாகவும், எல்லைப் பகுதியின் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சிப்பதாகவும் இந்தியாவை சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இராணுவமும், வெளிவிவகார அமைச்சகமும் இந்த ஒட்டுமொத்த பிரச்சனை தொடர்பாக மௌனம் சாதித்து வரும் நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக கடுமையான சவாலை சந்தித்து வரும் சூழலில், எல்லைப் பகுதியில் நடக்கும் சம்பவம் “மிகவும் உணர்திறன் மிக்க இருப்பதாக” டெல்லி அதிகாரிகள் விவரிக்கின்றனர்.

இந்திய எல்லைக்குள், கால்வான் நதி பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீனர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் பகுதியில்  துருப்புக்கள் முகாமிட்டு வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது. பங்கோங் த்சோ ஏரியின் வடக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் ஷியோக் மற்றும் கால்வான் நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு  அருகில் தற்போதைய கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

இந்தியா-சீனா உண்மையான எல்லைக் கோடு நோக்கி ஆற்றங்கரையில் டார்புக்-ஷியோக்-தவுலத் பேக் ஓல்டி (டி.எஸ்.டி.பி.ஓ) சாலையிலிருந்து புது கிளை சாலையை உருவாக்குவதாக சீனர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

சீனர்கள் 70-80 கூடாரங்களை அமைத்து, துருப்புக்களை இப்பகுதிக்கு நகர்த்தி வருகின்றனர். அதிகப்படியான கனரக வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.என் அல்லது இராணுவத்தின்  வடக்குத்  துணைத்துறை பிரிவின் கீழ் இந்த பகுதி வருகிறது.  அதே நேரத்தில், இதற்கு தெற்கே உள்ள பகுதிகள் ஐ.டி.பி.பி. பிரிவின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பிரிவின் கீழ் வருகின்றன.

பாங்கோங் சோ போலல்லாமல், கால்வான் பகுதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி அல்ல. எல்லைக் கோடுகளை இரு தரப்பினரும்  ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப ரோந்து  பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் ரோந்து பணிகளில் எந்த மீறலும் இல்லை. ஆனால்,  தற்போது நமது பகுதியில் சாலை அமைப்பதை சீனா ஆட்சேப்பிக்கின்றது. இதை புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளதாக ராணுவ  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . அந்த பகுதியில் கூடுதல் துருப்புக்களை இந்தியா மாற்றியுள்ளது. இருப்பினும், இதுவரை அவர்கள்  அந்த இடத்தில் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காரகோரம் மலைத்தொடர் அடிவாரத்தில், ஷியோக் மற்றும் தர்பூக் ஆகியவற்றுடன், தவுலத் பேக் ஓல்டியை இணைக்கும் டி.எஸ்.டி.பி.ஓ சாலை ஒரு வருடத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்ப சீரமைப்பு பொருத்தமற்றது எனக் கண்டறியப்பட்ட பின் இந்த 255 கி.மீ சாலை, ஷியோக் மற்றும் டாங்சே நதிகளில் அருகே செல்லும் விதமாக மறுசீரமைக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் அமைந்திருக்கும் பாங்கோங் சோவில் , தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தபடி, சீனர்கள் ஏரியில் கூடுதல் படகுகளை நிறுத்தியதோடு,  ஏரியின் வடக்குக் கரையில் பிங்கர் – 2 க்கு அப்பால் இந்திய வீரர்களின் நடமாட்டத்தை நிறுத்திவிட்டது.

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி ) பாங்கோங் சோ ஏரியை இரண்டாக பிரிக்கிறது. ஏரியின் 45 கி.மீ நீளமுள்ள மேற்கு பகுதியை இந்திய கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை சீன கட்டுப்பாட்டிலும் உள்ளன. சீனாவின் திட்டமிட்டு எந்தவொரு தாக்குதலிலும் பயன்படுத்தக்கூடிய முக்கிய அணுகுமுறைகளில் (சுஷுல் அணுகுமுறை) இந்த எல்லைப் பகுதி அமைந்துள்ளது.

எல்.ஏ.சி , பிங்கர் 8 பகுதி வரை நீட்டிப்பதாக இந்தியாக தெரிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது வரை பிங்கர்- 4 பகுதி வரை மட்டுமே இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.

சீனாவின் எல்லை பிரிவு பிங்கர் 8-ல் அமைந்திருப்பதாகவும், அதே நேரத்தில், இந்தியாவின் எல்லைப் பிரிவு பிங்கர் 3-க்கு அருகில் அமைந்துள்ளதாக சீனா தெரிவித்து வருகிறது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பிங்கர் 2 வழி செல்வதாக சீனா கருதுகிறது. இந்த வேறுபட்ட கருத்துகளினால், இந்த குறிப்பிட்ட பகுதி சர்ச்சைக்குரியதாக உள்ளது. வழக்கமான, ரோந்து பணிகள் மேற்கொள்வது மூலம் இரு படைகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது

எந்தவொரு தவறான புரிதலையும் தீர்ப்பதற்கான நிறுவப்பட்ட நெறிமுறையின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாயன்று எல்லைப் பிரிவு இராணுவத் தளபதிகளுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது அனைத்து வகையான நடைமுறையும் பின்பற்றப்படுகிறது,”என்று வட்டாரங்கள் கருதுகின்றன.  இருப்பினும், அடுத்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும்  இருப்பிடம் குறித்த கேள்விக்கு அவர்கள்  பதில்தர மறுத்துவிட்டனர்.

செவ்வாயன்று, சீன வெளியுறவு அமைச்சகம் “தேவையான எதிர் நடவடிக்கைகள்” குறித்து எச்சரித்தது. தனது எச்சரிக்கையில்”எல்லைப் பகுதிகளில் சீன எல்லைப் படைகள் அமைதியை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளன. அதே நேரத்தில், எங்கள் தாயகத்தின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதியுடன் பாதுகாப்போம்.” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி அலைஸ் வெல்ஸ், “சீன ஆக்கிரமிப்பு எப்போதும் சொல்லாட்சி முறையில் அமையாது. தென்சீனக் கடல் பிரச்சனையாக  இருக்கட்டும், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையாக இருக்கட்டும், சீனாவின் செயல்பாடுகள் மோதும் தன்மையுடையதாகவும்,குழப்பமானதாகவும் உள்ளது.  அதனால்தான், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் அணிவகுப்பை நாம் காண்கிறோம். எல்லை மோதல்கள் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை நினைவூட்டுகின்றது ” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close