லடாக்கில் உள்ள சரியான கட்டுப்பாட்டு கோட்டில் (எல்.ஏ.சி) இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே பின்வாங்கல்களுக்கான முதல் அறிகுறியாக, இரு தரப்பு வீரர்களும் கால்வான் பகுதியில் பிபி 14இல் திரும்பி செல்லத் தொடங்கியுள்ளனர். ஹாட் ஸ்பிரிங்ஸ் பிரிவில் பிபி 15 மற்றும் பிபி 17ஏ ஆகியவற்றிலும் மற்ற இரண்டு மோதல் தளங்களிலும் இரு தரப்பிடம் இருந்தும் இதேபோன்ற நகர்வு எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “நேற்று மாலை கால்வனில் சீனாவின் பக்கம் சில நடவடிக்கைகள் காணப்பட்ட பின்னர், இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. அங்கே அவர்கள் கட்டியிருந்த பாதுகாப்பு தளங்களை அகற்றிவிட்டு இப்போது அந்தப் பகுதியை காலி செய்துள்ளனர். துருப்புக்களை தங்கள் பக்கம் அழைத்துச் செல்ல சில வாகனங்களும் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.” என்று தெரிவித்தனர்.
இந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் இரு தரப்பினரும் திரும்பிச் செல்லும் தூரத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் தகவல் தெரிவித்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி இந்த நகர்வு இருந்தது. மேலும், இரு தரப்பினரும் பிபி 14க்கு திரும்பிச் சென்றனர். எந்த உறுதிப்படுத்தலும் சரிபார்த்த பிறகு மட்டுதான் கூறமுடியு என்று வட்டாரங்கள் தெளிவுபடுத்தின.
கால்வனில் பிபி 14இல் உள்ள இடத்தில் சீனத் தரப்பு தங்கள் பாதுகாப்பு முகாம்களை அகற்றிவிட்டது. அந்த இடம் ஜூன் 15-ம் தேதி நடந்த வன்முறை மோதல்களைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சீன நிலையை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற சென்ற பின்னர், அவர்களால் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ஆகும். அப்போது நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் சில சீன வீரர்களும் உயிர் இழந்தனர்.
பிபி 15 மற்றும் பிபி 17ஏ ஆகியவற்றில் உள்ள இதர நிலைகளில் சீன தளங்கள் அகற்றப்படுகின்றன. சீன ராணுவ வாகனங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தளங்கள் ஹாட் ஸ்பிரிங்ஸ் பிரிவில் வருகின்றன. அது பிபி 17ஏ கோக்ரா என்றும் அழைக்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாங்கோங் டிஎஸ்ஒ அல்லது டெப்சாங்கில் பின்வாங்குதலை நோக்கி எந்த நகர்வும் இல்லை. அங்கே எல்.ஏ.சி பகுதியில் இரு படைகளும் போட்டியிடுகின்றன.