/indian-express-tamil/media/media_files/2025/08/24/air-defence-system-2025-08-24-15-06-40.jpg)
உள்நாட்டில் தயாரான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 24) அறிவித்துள்ளார். ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தப்பட்டதாகவும், எதிரிகளின் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல அடுக்கு அமைப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The @DRDO_India has successfully conducted the maiden flight Tests of Integrated Air Defence Weapon System (IADWS), on 23 Aug 2025 at around 1230 Hrs off the coast of Odisha.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2025
IADWS is a multi-layered air defence system comprising of all indigenous Quick Reaction Surface to Air… pic.twitter.com/TCfTJ4SfSS
ஒடிசா கடற்கரையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் சோதனை ஓட்டத்தை "வெற்றிகரமாக" இந்தியா நடத்தியுள்ளது. இந்த உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஒடிசா கடற்கரையில் சோதனை செய்யப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த புதிய வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை, ஆபரேஷன் சிந்துருக்கு 3.5 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. IADWS என்பது பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. விரைவான பதில் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் (quick reaction surface-to-air missiles), மிகக் குறைந்த தூர வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள் (very short range air defence system - VSHORADS), அதிக சக்தி கொண்ட லேசர் அடிப்படையிலான நேரடி ஆற்றல் ஆயுதங்கள் (directed energy weapons - DEW) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
"IADWS-ஐ வெற்றிகரமாக உருவாக்கிய DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு எனது வாழ்த்துக்கள்" என்று ராஜ்நாத் சிங் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். "இந்த தனித்துவமான சோதனை, நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை நிலைநிறுத்தி உள்ளது. இது எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து முக்கிய தளங்களுக்கான பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும்" என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.