இந்தியாவில் முதல் மரணத்தை உறுதி செய்த கொரோனா தடுப்பூசி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Covid-19 vaccination : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் பக்க விளைவுகள் காரணமாக நிகழ்ந்த முதல் மரணம் இதுவாகும்

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து 80 ஆயிரத்திற்கு கீழாக குறைந்துள்ளது. இதனை மேலும் குறைக்கும் வகையில் மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாட்டை விதித்து வரும் நிலையில் வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்கும் வகையில், நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தற்போது அக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசியில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியானாலும், அவை அனைத்தும் வதந்தி என்றும், இந்த தடுப்பூசி நோய்ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தற்போது தனது பலி எண்ணிக்கையை தொடங்கியுள்ளது.  கடந்த  மார்ச் 8 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட  68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக மரணமடைந்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின் பக்க விளைவுகள் காரணமாக நிகழ்ந்த முதல் மரணம் இதுவாகும். தேசிய ஏஇஎஃப்ஐ (AEFI) கமிட்டியின் அறிக்கையின்படி,கொரோனா தடுப்பூசியைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு பிரிவு தொடர்ந்து 31 மோசமான பாதகமான நிகழ்வுகளை மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தடுப்பூசி மையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான அனாபிலாக்டிக் எதிர்வினைகள் ஏற்படுகின்றன. அப்போது  உடனடி சிகிச்சை மேற்கொள்வதால் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாக, தேசிய ஏஇஎஃப்ஐ  (AEFI) குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா பி.டி.ஐ கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிப்ரவரி 5 ஆம் தேதி 5 பேர், மார்ச் 9 அன்று எட்டு பேர் மற்றும் மார்ச் 31 அன்று 18 வழக்குகள் பேர் என 31 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் முதல் வாரத்தில் அறிக்கைபடி, ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கு 2.7 மரணங்கள் மற்றும் ஒரு மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கு 4.8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஆனால்  மரணங்கள்  மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது தடுப்பூசிகள் காரணமாக நிகழ்ந்ததாக தானாகவே நிகழ்ந்த்தா என்பது குறிக்கவில்லை என்று அந்த குழு குறிப்பிட்டுள்ளது..

இது தொடர்பாக  நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் காரண மதிப்பீடுகள் மட்டுமே நிகழ்வுக்கும் தடுப்பூசிக்கும் இடையில் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள உதவும், என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, காரண மதிப்பீடுகளுக்கு கூடுதலாக, மரண வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 31 மதிப்பீடு செய்யப்பட்டவர்களில், 18 பேர் தடுப்பூசிக்கு முரணான தொடர்பு இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன (தற்செயலானது – தடுப்பூசிக்கு இணைக்கப்படவில்லை), 7 பேர் உறுதியற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, 3 பேர் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பானவை என கண்டறியப்பட்டது, இதில் ஒருவர் மட்டும் கவலை தொடர்பான எதிர்வினை என்றும் 2 பேரின் பாதிப்பு வகைப்படுத்த முடியாதவை என்று கண்டறியப்பட்டது என்று அரசு அறிக்கை கூறியுள்ளது.

மேலும் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான எதிர்வினைகள் தற்போதைய விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் தடுப்பூசிக்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய எதிர்விளைவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஒவ்வாமை மற்றும் அனாபிலாக்ஸிஸ் போன்றவையாகும். தடுப்பூசிக்குப் பிறகு விரைவில் நிகழ்ந்த எதிர்வினைகள் நிச்சயமற்ற எதிர்வினைகள் என்றும், தடுப்பூசி காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு மருத்துவ சோதனை தரவுகளில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. ,

அனாபிலாக்ஸிஸின் மற்ற இரண்டு நிகழ்வுகளில், இரண்டு நபர்களுக்கு ஜனவரி 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மேலும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளனர். ஆனால் வகைப்படுத்த முடியாத நிகழ்வுகள் விசாரிக்கப்பட்ட நிகழ்வுகள், முக்கியமான தகவல்களைக் இல்லை என்பதால் நோயறிதலை கண்டறிய போதுமான ஆதாரங்கள் இல்லை. இந்த தொடர்புடைய தகவல் கிடைக்கும்போது, ​​இந்த அறிக்கை மறுபரிசீலனை செய்யப்படலாம்.

தடுப்பூசியின் நன்மைகள் சிறிய தீங்கு விளைவிக்கும் அபாயத்தை விட மிகப் பெரியவை என்றும், மிகவும் முன்னெச்சரிக்கையின் ஒரு நடவடிக்கையாக, தீங்கு விளைவிக்கும் அனைத்து சமிக்ஞைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அரசு குழு சார்பில்  கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India confirms first death following covid 19 vaccination

Next Story
எல்லைப் பகுதியில் துருப்புகளை நீக்க, உயர்மட்ட ஆலோசனையை பரிந்துரைக்கும் சீனாIndia china, border issue
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com