இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிகபட்சமாக, கடந்த வெள்ளிகிழமை ஒரே நாளில் 63 புதிய வழக்குகள் பதிவானதையடுத்து, தொற்று எண்ணிகை 236 ஆக உயர்ந்தது. மேலும், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்படும் என்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேலும் 35 புதுவழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நடத்தப்பட்ட சோதனை கொரோனா வைரஸ் தொற்று நெகடிவாக வந்துள்ளது. லக்னோவில் பாடகி கனிகா கபூர் வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததை அடுத்து,வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்களை தனிமைபடுத்திக் கொள்வதாக அறிவித்தனர். லக்னோவில் கனிகா கபூர் ஏற்பாடு செய்த ஒரு விருந்தில் வசுந்தரா ராஜே மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்: இதற்கிடையே, தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தாய்லாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த இருவருக்கும், நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய நரேந்திர மோடி,"வரும் மார்ச் 22ம் தேதி ( நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.