scorecardresearch

கோவாக்சின் தடுப்பூசி : 90% ஆவணங்களை WHO-விடம் சமர்பித்தது பாரத் பயோடெக்

Covid vaccine: அமெரிக்காவில் கோவாக்ஸின் தடுப்பூசி 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவது தொடர்பாக அமெரிக்கா உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் பாரத் பயோடெக் ஈடுபட்டு வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசி : 90% ஆவணங்களை WHO-விடம் சமர்பித்தது பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க தேவையான 90 சதவீத ஆவணங்கள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவை ஜூன் மாதத்தில் சமர்பிக்கப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (BBIL) சார்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவது குறித்து “நம்பிக்கை” இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணப்பம் சமர்பித்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர கால பயன்பாடு பட்டியலில் சேர்ப்பது தொடர்பான முதல்நிலை கூட்டத்தை மே-ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WHO அவசரகால பயன்பாட்டு நடைமுறையின் கீழ் முன்நிபந்தனை அல்லது பட்டியலிடுவதற்கான சமர்ப்பிப்புகள் ரகசியமானவை. மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட தயாரிப்பு பட்டியலுக்கான அளவுகோல்களைக் கண்டறிந்தால், WHO முடிவுகளை பரவலாக வெளியிடும். அவசரகால பயன்பாட்டு பட்டியல் செயல்முறையின் காலம் தடுப்பூசி உற்பத்தியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் தரத்தையும், WHO அளவுகோல்களையும் சார்ந்துள்ளது.

மத்திய அரசின் மூத்த செயல்பாட்டாளர்கள் உட்பட சுமார் 2 கோடி இந்தியர்கள் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுள்ளதால் இந்த ஒப்புதல் முக்கியமானது, மேலும் WHO- அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமே தடுப்பூசி பாஸ்போர்ட்களை வழங்குவது குறித்து விவாதம் நடைபெறுகிறது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் மற்றும் பயோடெக் துறையின் மூத்த அதிகாரிகள் பிபிஐஎல் எம்.டி டாக்டர் வி கிருஷ்ணா மோகன் WHO’s EUL of Covaxin க்கான விண்ணப்பத்தின் நிலை குறித்து ஒரு சந்திப்பை நடத்தினர்.

கூட்டத்தின் போது, ​​கோவாக்சின் ஏற்கனவே 11 நாடுகளிடமிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கு 7 நாடுகளில் உள்ள 11 நிறுவனங்கள் ஆர்வம் காட்டின “WHIL EUL ஐப் பெறுவதில் BBIL நம்பிக்கையுடன் உள்ளது.

அமெரிக்காவில் கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவது தொடர்பாக அமெரிக்கா உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் மற்றும் ஹங்கேரியில் கோவாக்சின் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் இறுதி கட்டத்தில் பிபிஐஎல் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: India corona vaccine bharat biotech submits 90 of documents for who