கொரோனா அதிகரிக்கும் விகிதம்: தேசிய சராசரியை விட 24 மாநிலங்களில் அதிகம்

நாட்டில், 37 சதவீத கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய பாதிப்பு 33 சதவீதமாக குறைந்தது.

By: Updated: June 10, 2020, 07:48:47 AM

பொது பொது முடக்கநிலை படிப்படியாகத் திறக்கப்படுவதால், நாட்டின் கொரோனா பாதிப்புகள் அதிகாமாகும் என்ற எதிபார்ப்பு  தற்போது உண்மையாகி வருகிறது. உதாரணமாக, பல மாநிலங்கள், கடந்த காலங்களை விட தற்போது அதிகமான கொரோனா பாதிப்புகளை கண்டறிந்து வருகின்றன.

ஜம்மு- காஷ்மீர், ஹரியானா ஆகிய  மாநிலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பாதிப்பை பதிவு செய்தன; உத்தர பிரேதேச மாநிலம்  கடந்த மூன்று நாளில் இரண்டு முறை கொரோனா பாதிப்பின் புது உச்சத்தை எட்டியது; ஒரு வாரத்திற்கும் மேலாக அசாம், திரிபுரா மாநிலத்தின் கொரோனா வளர்ச்சி நாளுக்கு நாள் 10 சதவீதமாக அதிகரித்து வருகிறது; கடந்த சில நாட்களாக அதிகப்படியான கொரோனா பாதிப்பை உறுதி செய்து வந்த கர்நாடக மாநிலம், நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த 10 மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், சட்டிஸ்கர், கேரளா போன்ற பிற மாநிலங்கள் நாள்தோறும் அதிகளவிலான கொரோனா பாதிப்பை உறுதி செய்து வருகின்றன. முதல் இந்து இடங்களில் உள்ள தமிழகம், புதுடெல்லி  ஆகிய மாநிலங்கள் தினமும் 1300- 1500 என்ற கணக்கில் கொரோனா தொற்றை பதிவு செய்து வருகின்றன.

தேசிய நோய்த் தொற்று சராசரி வளர்ச்சியை விட (4.39%), கிட்டத்தட்ட 24 மாநிலங்கள்/ யூனியன் பிரேதேசங்களில் காணப்படும் சராசரி வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

எவ்வாறாயினும், முதல் ஐந்து இடங்களில் உள்ள மூன்று மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. ஆம்…. மகராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியாதல், தேசிய மட்டத்திலும் இதன் பிரதிபலிப்பு எதிரொலிக்கிறது. உத்தர பிரேதேசம், மத்திய பிரேதேசம் ஆகிய மாநிலங்களும் தேசிய மட்டத்தில் காணப்படும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றது.

தமிழகம்,புதுடெல்லி (இரண்டாவது/மூன்றாவது இடங்கள்) புதிய உட்சத்தை பதிவு செய்து வந்தாலும், கொரோனா பங்களிப்பில் மேற்கூறிய மூன்று மாநிலங்களின் ஆதிக்கம்  வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. உதாரணாமாக, முதல் ஐந்து இடங்களில் இருக்கும் மாநிலங்களின் மொத்த கொரோனா பங்களிப்பு ( 74- ல் இருந்து 68 சதவீதமாக) குறையத் தொடங்கியது.

மேலும், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 52% பங்களிப்பை தந்த மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய  மூன்று மாநிலங்களின் தற்போதைய பங்களிப்பு 45 சதவீதமாக குறைந்தது.

நாட்டில், 37 சதவீத கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய பாதிப்பு 33 சதவீதமாக குறைந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பெருவாரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய அளவிலான சராசரி நோய்த் தொற்று விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது (தற்போது, வெறும் 4.38% ). இருப்பினும், இயல்பு நிலை திரும்புவதால் உள்ளூர் மட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதுவரை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படாத (அல்லது) குறைந்தளவு கொரோனா பாதிப்பு கொண்ட    மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் தற்போது நித்தம் நித்தம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், புவியியல் ரீதியாக, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது பரந்து விரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India coronavirus lockdown news national average daily growth rate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X