மார்ச் மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதல்முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால் சராசரியாக எத்தனை புதிய பாதிப்புகளை உருவாக்க முடியும் என்பதைக் கூறும் மனித கடத்துதல் அளவு (R0) அதிகரித்துள்ளது.
இந்தியாவில், கடந்த மார்ச்-4 ம் 1.83 என்ற எண்ணிக்கயில் இருந்த கொரோனா மனித கடத்துதல் அளவு அதன்பின் படிப்படியாக குறையத் தொடங்கியது. இருப்பினும், ஜூலை முதல் வாரத்தில் நடைமுறைக்கு வந்த இரண்டாவது அன்லாக் காலத்தில், மனித கடத்துதல் அளவு முதன்முறையாக அதிகரித்துள்ளதாக சென்னை கணித அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகிறது.
தற்போது மனித கடத்துதல் அளவு 1.19 ஆக உள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 1.19 நபர்கள் வரை பாதிப்படையச் செய்கிறார் என்று சென்னை கணித அறிவியல் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் சீதாப்ரா சின்ஹா தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து சராசரியாக 1.83 பேருக்கு பரவியது. இந்த அளவு வுஹான் மாகாணாத்தில் 2.14 ஆகவும், இத்தாலியில் 2.73 ஆகவும் இருந்தது.
ஏப்ரல் 6 -11 தேதிக்கு இடையில், இந்தியாவின் இந்த மனித கடத்துதல் அளவு 1.55 ஆக குறைந்தது. ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியா படிப்படியாக தளர்வுகளை அறிவித்த நிலையில் மனித கடத்துதல் அளவு 1.49 ஆகவும், ஜூன் 26 க்குள் 1.11 என்ற குறைவான அளவை எட்டியது.
இருப்பினும், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்லாக் 1.0-வின் ஒரு மாதத்துக்கு பிறகு குறிப்பாக ஜூலை 2-5 வரையிலான தேதிகளில் கொரோனா மனித கடத்துதல் அளவு 1.19ஆக உயர்ந்தது.
மே, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்த தொற்றுதல் நிலையில் தான் நாம் தற்போது இருக்கிறோம். ஜூன் மாத இறுதியில் நாம் கட்டுப்படுத்திய தொற்றுதல் அளவு விகிதம் நமக்கு நீட்டிக்கவில்லை என்றும் சின்ஹா தெரிவித்தார்.
கர்நாடகா (1.66), தெலுங்கானா (1.65) ஆந்திரா (1.32) ஆகிய தென் மானிலங்களில் அதிக மனித கடத்துதல் அளவு உள்ளது. மேலும், வேகமாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாநிலங்கள் என கருதப்பட்ட குஜராத், மேற்க் வங்கம் மாநிலங்களின் மனித கடத்துதல் அளவு முறையே 1.15, 1.1 எனக் குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் பொது முடக்கத்திற்கு பிந்தைய மனித கடத்துதல் அளவு (R0) அதிகரிப்புக்கு சில தென் மாநிலங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று சின்ஹா கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்தா மாத இறுதிக்குள் சுமார் 6 லட்சத்தை எட்டக்கூடும் என்று சின்ஹாவின் மாடலிங் காட்டுகிறது. ஜூலை 21 க்குள் மகாராஷ்டிராவில் 1.5 லட்சத்துக்கும், தமிழகம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மாநில புல்லட்டின் மாவட்ட வாரியான தரவுகளின் பகுப்பாய்வு,
கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கொண்ட முதல் 10 மாவட்டங்களில் தற்போது படிப்படியாக பாதிப்புகள் குறைந்து வருவதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட மாவட்ட வாரியான பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு, முதல் 10 மாவட்டங்களில் இந்தியாவின் 46 சதவீத கொரோனா பதிப்புகள் கண்டறியப்பட்டன. தற்போது, அதன் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல், முதல் 10 மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட 59 சதவீதம் இறப்பு எண்ணிக்கை, தற்போது 54 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்தியாவில் குறைந்தது ஒரு கொரோனா உயிரிழப்பை பதிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 448 ஆக உள்ளது . இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 391 ஆக இருந்தது.
அகிக கொரோனா பாதிப்புகள் கொண்ட முதல் 10 மாவட்டங்கள் பட்டியலில், பெங்களூரு, பால்கர் ஆகிய மாவட்டங்களுக்கு பதிலாக குர்கான், இந்தூர் போன்ற மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக இறப்புகளைக் கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பெரிய மாற்றம் எதுவும் தென்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.