இந்தியாவில், கோவிட்-19 நோய் இறப்புகள் 380-ஐத் தாண்டியுள்ள நிலையில், 60 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள், இந்தியாவின் நான்கு நகரங்களிலிருந்து பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
Advertisment
ஏப்ரல் 14 மாலை வரை, இந்தியாவில் பதிவாகியுள்ளன கோவிட்- 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 382. இதில், கவனித்துப்பார்க்க வேண்டிய விசயம் என்னவென்றால், 45 சதவீத இறப்புகள் (அதாவது, 175 பேர்) மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. தானே, வசாய், பன்வெல், நவி மும்பை,மீரா பயந்தர் போன்ற மும்பை பெருநகரப் பகுதிகளில் இருந்து 127 பேரும், புனே பகுதியில் இருந்து 38 பேரும் மரணமடைந்துள்ளனர் .
Advertisment
Advertisements
மும்பை, புனே, இந்தூர், டெல்லி ஆகிய இந்தியாவின் நான்கு நகரங்கள், மொத்த எண்ணிகையில் 60 (232 பேர்) சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளை பதிவு செய்துள்ளது. அகமதாபாத் (13), ஹைதராபாத் (12 ) கோவிட்- 19 மரணங்களை பதிவு செய்துள்ளது. எனவே, மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் கோவிட்- 19 மரணங்களின் மூன்றில் இரண்டு பங்கு இந்த ஆறு நகரங்களில் இருந்து பதிவாகியுள்ளது.
நேற்று (ஏப்ரல். 14) மாலை வரை டெல்லியின் இறப்பு எண்ணிக்கை 30-க உயர்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ள 53 மொத்த இறப்புகளில்,37 இறப்புகள் இந்தூர் நகரத்தில் பதிவானவை.
கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நகரமாக இந்தூர், மற்றும் புனே விளங்குகிறது. உதாரணமாக, 374 கோவிட் நோயாளிகளை பதிவு செய்த புனேவில் இதுநாள் வரையில் ( ஏப்ரல். 14), 38 பேர் இறந்துவிட்டனர், அதாவது, ஒவ்வொரு 10 கோவிட் நோயாளிக்கும் ஒருவர் இறக்கிறார். 411 வழக்குகள் பதிவு செய்துள்ள இந்தூர் நகரில் 37 பேர் இறந்துள்ளனர். அதாவது, ஒவ்வொரு 11 நோயாளிக்கும் ஒருவர் இறக்கிறார். இந்தூரில் பதிவாகியுள்ள பெரும்பாலான பாதிப்புகள், மற்றும் இறப்புக்கள், கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வுடன் தொடர்புடையவை.
இதுபோன்ற இறப்பு விகிதம் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கணிசமாகக் குறைகின்றது. கிரேட்டர் மும்பை பிராந்தியத்தில் கிட்டத்தட்ட, ஒவ்வொரு 16 கோவிட் நோயாளிக்கும் ஒருவர் இறக்கிறார் ( நோய் பாதிப்பு -2,075, இறப்புகள் - 127 ). டெல்லியில், ஒவ்வொரு 52-வது நோயாளிக்கு ஒருவர் மரணமடைகிறார்.