Advertisment

கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் ஒட்டு மொத்த இறப்பு விகிதம் குறைகிறதா?

சில இறுதி சடங்கு செய்யும் நிறுவனங்களும்,  உடல் தகனம் செய்யும் நிறுவனங்களும் தங்கள்  வியாபாரத்தில் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் சரிவைக் கண்டதாக தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் ஒட்டு மொத்த இறப்பு விகிதம் குறைகிறதா?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், உலகம் முழுவதும் மரணங்களை அதிகமாக பதிவு செய்து வரும் நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில், இறப்புகளின்  எண்ணிக்கை வியத்தகும் வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.  கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு, ஒட்டுமொத்த இறப்பு தரவுகளுக்கு முன்னர் பொதுவாக அறிவிக்கப்படுகின்றன. ஆகையால், மற்ற நாடுகளைப் போலல்லாமல் கொரோனா இறப்புகளை  இந்தியா சரியான முறையில் பதிவு செய்வதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இருப்பினும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களில் நடக்கும் விபத்து இறப்புகள்  பொது முடக்க காலகட்டத்திற்கு பின்பு கணிசமாக குறைந்துள்ளதாக தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், தகனக் கூடங்கள் மற்றும்  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மேலும், இறப்பு குறித்த தகவலை உறவினர்களுக்கு சொல்வதை குடும்ப உறுப்பினர்கள்  தயங்கி வருகின்றனர்.

சீனாவில் 2019 டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து, சீனாவில் அனைத்து மாகாணங்களிலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அதன் இறப்பு விகிதங்கள்  ஆராயப்பட்டு வருகின்றன. உலகளவில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 190,000க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர் .

சமீபத்திய வாரங்களில், சில நாடுகளில் இறப்புகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில் இதற்கு நேர்மாறாக இருப்பது தெரியவந்துள்ளது( மொத்த இறப்புகள் குறித்த தரவுகள்  இல்லாத நிலையில் ).

 

"இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று அந்தெஸ்டி இறுதிச் சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ருதி ரெட்டி கூறினார். ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு ஐந்து இறுதி சடங்குகளை  கையாண்டதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை  மூன்றுக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். ”வருவாய் ஒரு எல்லைக்குக் கீழே சென்றால், ஊதியக் குறைப்புக நாங்கள் அறிவிப்போம்,” என்று ரெட்டி கூறினார்.

மற்ற பகுதிகளில் இருந்து வரும் தரவுகளும் இதே போன்ற கதையைச் தான் சொல்கின்றன. சுமார் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் மத்திய மும்பை பகுதியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறப்பு எண்ணிக்கையோடு  ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்  இறப்புகள் எண்ணிக்கை சுமார் 21% குறைந்துள்ளதாக நகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதே காலகட்டத்தில்,  பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின்  மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் இறப்புகள் 67% சரிந்துள்ளன.

ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

மேலும், வேறு இரண்டு நகரங்களிலிருந்து பெரும்  தரவுகளும், இதேபோன்ற  கருத்தை தான் முன்வைகின்றன. சில இறுதி சடங்கு செய்யும் நிறுவனங்களும்,  உடல் தகனம் செய்யும் நிறுவனங்களும் தங்கள்  வியாபாரத்தில் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் சரிவைக் கண்டதாக தெரிவிக்கின்றன.

"இறப்புகள் அதிகரிப்பதை நாம் காணவில்லையெனில், அதிக கோவிட்-19 இறப்புகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உண்மையல்ல" என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோயியல் பேராசிரியர் கிரிதர் பாபு கூறினார்.

குறையும்  விபத்துக்கள்: 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச்- 25ம் தேதி, 1.3 பில்லியன் மக்கள் கொண்ட இந்திய நாட்டை 21 நாட்கள் பொது முடக்கம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போதைய நிலவரத்தின்படி, இதுவரையில் மொத்தம் 23,077 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு, 718 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நோய் பாதித்தவர்களில் குணமடையும் சராசரி 20.57 சதவீதமாக உள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவு செய்யப்படுவதன் மூலம், இந்தியா மற்ற நாடுகளில் இருந்து முரண்படுகிறது. எடுத்துக்காட்டாக,  நெதர்லாந்த் நாடு ஏப்ரல் முதல் வாரத்தில், எப்போதையும் விட  அதிகமாக  2000  இறப்புகளை  பதிவு செய்தது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மார்ச் மாதத்தில் இறுதிச் சடங்குகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது.  இத்தாலியின் சில நகரங்களில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகள் அதிகரித்தன.

சாலை மற்றும் ரயில் விபத்துகளினால் ஏற்படும் உயிர்ச்சேதம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது  இதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் தகன ஊழியர்கள் சந்தேகிக்கின்றனர்.

அசாம் மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், " சாலை விபத்து , மது, போதைப்பொருள், பக்கவாதம் மற்றும்  மாரடைப்பு போன்ற நோயாளிகள் கூட குறைந்த எண்ணிக்கையில் தான் மருத்துவமனைக்கு  வருகிறார்கள்" கூறினார்.

2018ம் ஆண்டில் இந்தியாவின்  சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 151,400 க்கும் மேற்பட்டவர்கள்  மரணமடைந்தாதாக  அதிகாரப்பூர்வ  தரவுகள் தெரிவிக்கின்றது. கொரோனா பொது முடக்க காலநிலையால், இந்த ஆண்டின்  சாலை உயிர் சேதம் குறைந்தது 15%  (2018ம் ஆண்டு ஒப்பிடுகையில்) குறையும்  என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக  இயக்குனர் பரேஷ் குமார் கோயல் தெரிவித்தார்.

பயணிகள் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில் விபத்துக்களில் ஏற்படும்  உயிர் சேதமும் குறைந்துள்ளது. உதாரணமாக,மும்பையில் ஒவ்வொரு நாளும், குறைந்தது ஆறு பேர் ரயில் நெட்வொர்க்கில் இறக்கின்றனர்.

 

குறையும் கொலைகள்:  கங்கை ஆற்றின் கரையில் செயயப்படும் தகனப் பணிகளுக்கான பொறுப்பான நீரஜ் குமார் இது குறித்து பேசுகையில், " "வழக்கமாக நாங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது விபத்தில் உயிரிழந்தவர்கள் 10 பேருடைய உடல்களையும், கொலை வழக்குகள் தொடர்பான உடல்கள் பலவற்றையும் பெறுவோம். ஆனால் ஊரடங்கிற்கு பின்னர் நாங்கள் இயற்கையாக உயிரிழந்தவர்களுடைய உடல்களை மட்டுமே பெறுகிறோம். முன்னர் ஒரு நாளைக்கு 30 உடல்கள் தகனம் செய்யப்பட்ட இந்த இடத்தில்  மார்ச் 22 முதல் ஒரு மாதத்தில் 43 பேர் மட்டுமே தகனம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

கடுமையாக பொது முடக்கம் அமல்படுத்தியதால், சில குற்றங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இறப்புகள் பதிவு செய்வதில் உள்ள சிரமங்களையும்  இந்த விகிதம் பிரதிபலிக்கலாம்.   ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன்  இந்த எண்ணிக்கை  அதிகரிக்கும்" என்று அகமதாபாத் மாநகராட்சியின் மூத்த சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் பவின் ஜோஷி தெரிவித்தார்.

எனினும், இந்தியாவின் ஒடிசா  மாநிலம்  இதற்கு சற்றும் முரண்பாடாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட , தற்போது 11% அதிகமான இறப்புகளை அம்மாநிலம் பதிவு செய்தது. இது குறித்த கேள்விக்கு, அதிகாரிகள் உடனடியாக  பதிலளிக்கவில்லை.

மேற்கு வங்காள ஒட்டுமொத்த இறப்பு தொடர்பான தரவுகளை பெற முடியவில்லை என்று  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு  கொரோனா வைரஸ் இறப்புகளை குறைத்து மதிப்பிடுவதாக அரசாங்கத்தை சில மருத்துவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். அங்கு, அரசால் நியமிக்கப்பட்ட குழு மட்டுமே கோவிட்- 19 தொடர்பான மரணங்களை அறிவிக்க்கும்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment