மொத்த இறப்பு விகிதத்தில் பெண்களே அதிகம்: புதிய ஆய்வு கூறுவது என்ன?

70–79 வயதுக்குட்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பெண்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களில், அவர்களின் பங்கு 40 சதவீதத்தையும் தாண்டுகிறது

By: Updated: June 13, 2020, 02:04:19 PM

இந்தியாவில், கொரோனா பரவல் தொற்றுக்கு ஆண்கள்  அதிகப் பாதிப்புடையவர்கள் என்றாலும், கொரோனா தொடர்புடைய மரணங்களில் பெண்களின் விகிதம் அதிகமுள்ளதாக என்று ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே- 20ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், கொரோனா தொற்று பாதித்த ஆண்களிடம் 2.9 சதவீத இறப்பு விகிதம் காணப்படுகிறது.  பெண்களிடம் பெண்களிடம் 3.3 சதவீத இறப்பு விகதம் காணப்படுகிறது என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்தது .

குளோபல் ஹெல்த் சயின்ஸ் நாளிதழில் வெளியான இந்த புதிய ஆய்வுக் கட்டுரை, கோவிட் -19 நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில், (அதிகமில்லை என்றாலும்) சமமான கவனம் பெண்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கூற்றை முன்வைக்கிறது.

மக்கள்தொகை ஆராய்ச்சி மையம், டெல்லி- பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ,சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம், ஜெய்ப்பூர்-ஐ.ஐ.எச்.எம்.ஆர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்-வளர்ச்சி ஆராய்ச்சி மையம், ஹார்வர்ட் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், கேம்பிரிட்ஜ், சமூகம் மற்றும் நடத்தை அறிவியல் துறை, ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் போன்ற அமைப்புகள் கூட்டுசேகர (Crowdsource ) தரவுகள் ((https://www.covid19india.org/) மூலம் இந்தியாவின் வயது-பாலின வகை சார்ந்த கொரோனா பாதிப்பு மற்றும்  இறப்பு விகிதத்திற்கான (சி.எஃப்.ஆர்) மதிப்பீடுகளை  ஆய்வு செய்தது.

வயது-பாலினம் வகை சார் இறப்பு விகிதம்: 

ஆய்வாளர்கள், வயது-பாலினம் வகை சார்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளை ஆய்வு செய்தனர்.  மே 20 நிலவரப்படி கோவிட் -19 நோய்த் தொற்றில், பெண்களை விட (34 சதவீதம்) ஆண்களுக்கு (66 சதவீதம்) அதிக கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வயது நிரம்பிய முதியவர்களுக்கு பாலின வகையைச் (ஆண்/ பெண் என்றில்லாமல்) சார்ந்திராமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில், 1,019 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்புகள் 2,059 என்று இரு மடங்காக அதிகரிக்க 4 நாட்களானது (மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை) . அதே நேரத்தில்,  21,373 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்புகள் 42,546 என்று இரு மடங்காக அதிகரிக்க 11 நாட்களானது (ஏப்ரல் 23 முதல் மே 3 வரை). 49,405-ல் இருந்து 1,00,327 என்ற இரு மடங்கு பாதிப்புக்கு 13 நாட்களானது (மே 5 முதல் மே 18 வரை) . மே 20 வரையிலான தரவுகள் அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில், பெண்களின் எண்ணிக்கை 34.3 சதவீதமாக அதிகரித்தது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம், ஆண்/பெண் பேதமின்றி கிட்டத்தட்ட சமமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அதாவது, இந்த வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஆண் குழந்தைகளுக்கு (51.5%), பெண் குழந்தைகளுக்கு(48.5%) கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

நடுத்தர வயது வரம்பில், ஆண்களிடம் அதிகாமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. உதாரணமாக 30-39 வயதுக்குட்பட்டவர்களில், 70.4 சதவீத பாதிப்புகள் ஆண்களிடம் காணப்படுகிறது. 30-39 வயது வரம்பிற்கு பிறகு, மொத்த கொரோனா பாதிப்பில் பெண்களின் பங்கு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

70–79 வயதுக்குட்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பெண்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் கொரோனா பாதிப்பில், பெண்களின்  பங்கு 40 சதவீதத்தை தாண்டுகிறது. கொரோனா தொடர்பான மொத்த இறப்புகளில் பெண்களின் விகிதம் 36.9 சதவீதமாகும்.

30-39 வயதிற்குட்பட்ட பெண்கள் மத்தியில் மிகக் குறைந்த கொரோனா இறப்பு விகிதம் (21.3 சதவீதம்) காணப்படுகிறது. அதே சமயம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரண விகிதத்தில் பெண்களின் பங்கு  48.5 சதவீதமாக உள்ளது .

5–19 வயதிற்குட்பட்ட கொரோனா தொடர்பான மரணங்களில், ஆண்களின் இறப்பு சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த வயது வரம்பில் ஏற்பட்ட மரணங்கள் பெரும்பாலும் பெண்களால் சுமக்கப்படுகிறது.

மொத்த கோவிட் -19 பாதிப்பில், 20 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் 13.8 சதவிகித பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த வயதுக்கு உட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 2.1 சதவிகிதம் என்ற குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளது.

கொரோனா பாதிப்பில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் பாதிப்பு விகிதம்  9.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்த வயதுக்கு உட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 51.6 சதவீதமாக உள்ளது.

60 வயதிற்குட்பட்டவர்களின் இறப்புகளில் ஆண்களின் பங்கு  50.7 சதவீதமாகவும், பெண்களின் பங்கு 54.5 சதவீதமாகவும் உள்ளது. 20–59 வயதிற்குட்பட்ட மக்களிடத்தில் 76.4 சதவீத கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. மொத்த இறப்புகளில், இவர்களின் பங்கு 46.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

எனவே, மே- 20ம் தேதி வரையிலான தரவுகள் அடிப்படையில், மொத்த பாதிப்புகளில், நடுத்தர வயது மக்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால், மொத்த இறப்புகளில், வயது நிரம்பியவர்கள் ஒப்பீட்டளவில் அதிகளவிலான இறப்புகள் காணப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான கொரோனா பாதிப்புகள்,  சமூக பொருளாதார சூழ்ல் மற்றும் பாலின சமத்துவத்தோடு தொடர்புடையதா என்பதைப் புரிந்து கொள்ள மேலும் தரவு மற்றும் நுண்ணறிவு அவசியம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India covid 19 fatality relatively higher among females age speicific reserach

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X