தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியப் பயணத்தை தவிர்த்து விடுங்கள்; அமெரிக்க சுகாதாரத் துறை

நீங்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். பயணிகள் அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்டு வருவதால், தனது குடிமக்கள் இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் பாதிப்பு சற்றும் குறையாத நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கனிசமாக குறைந்த கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் உச்சம் பெற்று வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தனது குடிமக்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி)  அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சி.டி.சி தனது ஆலோசனையில், இந்தியாவில் “மிக உயர்ந்த அளவிலான கோவிட் -19” இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக சி.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் தற்போதைய தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாவதும்,  அவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அமெரிக்க குடிமக்கள் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளூங்கள்.

பயணிகள் அனைவரும் முக்கவசம் மற்றும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும், என்றும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான பயண பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ள சி.டி.சி  “நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டால், அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.  மேலும் நீங்கள் திரும்பி வந்த பிறகு சுய தனிமைப்படுத்த வேண்டியதில்லை.

முன்னதாக திங்களன்று, (நேற்று) பிரிட்டன் தனது “சிவப்பு பட்டியலில்” இந்தியாவை சேர்க்கப்படுவதாக அறிவித்ததுள்ளது. மேலும் இந்த நாட்டிலிருந்து வருகை தரும் அனைவருக்கும் தடை விதித்துள்ள நிலையில், அங்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது 10 நாட்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் ஞாயிற்றுக்கிழமை, ஹாங்காங் தனது விமானங்களைத் தடைசெய்தது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை நியூசிலாந்து தடை செய்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India covid 19 update us us advises its citizens avoid india traveling

Next Story
18+ அனைவருக்கும் தடுப்பூசி: எப்படி வழங்கப்போகிறது அரசு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com