சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பிறப்பித்த ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டு உத்தரவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை ஏப்ரல் 24 வரை ஒன்பது நாட்களில் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15 ம் தேதி 12 மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைக்கான கோரிக்கை இருந்த நிலையில், அது ஏப்ரல் 24 ஆம் தேதி 22 மாநிலங்களாக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஏப்ரல் 15ஆம் தேதி 12 மாநிலங்களுக்குஆக்ஸிஜன் ஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 20 முதல் அவர்களது ஆக்சிஜன் தேவை தொடர்பாக கோரிக்கை வைத்திருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
பூஷண் தனது கடிதத்தில், இந்த மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படும் யூனிட் பற்றிய விவரங்களை குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 20 முதல் வாரத்திற்கு 4,880 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக கோரியிருந்தன. அதன்படி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
பத்து நாட்களுக்குள் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் நிபூன் விநாயக், ஏப்ரல் 24 அன்று மற்றொரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஏப்ரல் 25 முதல் மாநிலங்களின் தேவையின் படி ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் கோரும் மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு 8,172 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது சுகாதார செயலாளரின் ஏப்ரல் 15ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் காட்டப்பட்டுள்ள கோரிக்கையை விட 67 சதவீதம் அதிகம்.
மத்திய அரசு இந்த 22 மாநிலங்களுக்கும் நாளொன்றுக்கு 8, 280 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கியுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு - காஷ்மீர், கோவா, சண்டிகர், ஹிமாச்சல் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் & டையூ ஆகியவை புதிதாக ஆக்சிஜன் கோரும் மாநிலங்கள் ஆகும்.
அந்த கடிதத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாநிலங்கள், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றுடன் ஆலோசித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் அதிகாரம் பெற்ற குழுவின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் கீழ் விநியோகத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மருத்துவ ஆக்சிஜனை அதிகம் கோரும் மாநிலங்கள் மகாராஷ்ட்ரா (1,784 மெட்ரிக் டன்), குஜராத் (1000 மெட்ரிக் டன்), கர்நாடகா (770 மெட்ரிக் டன்), உத்தரப்பிரதேசம் (657 மெட்ரிக் டன்), மத்தியப்பிரதேசம் (640 மெட்ரிக் டன்) ஆகும்.
ஏப்ரல் 24 ம் தேதி ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்ட 22 மாநிலங்களில், நான்கு மாநிலங்களுக்கு அவற்றின் தேவையை விட அதிக அளவு ஒதுக்கப்பட்டுள்ளது, நான்கு மாநிலங்களுக்கு அவர்களின் கோரிக்கையுடன் ஒப்பிடும்போது குறைந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாநிலங்களுக்கு கோரப்பட்ட அளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக ஆக்சிஜன் ஒதுக்கீட்டை பெற்ற மாநிலங்களின் விவரம்:
உத்தரப்பிரதேசம் ( 657 மெட்ரிக் டன் கோரப்பட்ட நிலையில், 857 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது )
கர்நாடகா (770 மெட்ரிக் டன் கோரப்பட்ட நிலையில் 802 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
டெல்லி (470 மெட்ரிக் டன் கோரப்பட்ட நிலையில் 490 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
மத்தியப் பிரதேசம் (640 மெட்ரிக் டன் கோரப்பட்ட நிலையில் 649 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
குறைவான அளவு ஆக்சிஜன் பெற்ற மாநிலங்களின் விவரம்:
ஹரியாணா (180 மெட்ரிக் டன் கேட்கப்பட்ட நிலையில் 162 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
குஜராத் (1000 மெட்ரிக் டன் கேட்கப்பட்ட நிலையில் 975 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
பஞ்சாப் (187 மெட்ரிக் டன் கேட்கப்பட்ட நிலையில் 137 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
தமிழ்நாடு (280 மெட்ரிக் டன் கேட்கப்பட்ட நிலையில் 220 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டது)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.