Advertisment

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? முழு எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்

மாநிலங்கள் பொது முடக்க நிலை  தொடரவேண்டும் என கேட்பது  உண்மைதான். அவை அனைத்தும் ஆராயப்படுகின்றது. தீர்ககமான ஒரு முடிவு எடுக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? முழு எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்

இந்தியாவில் கொவிட்-19 எண்ணிக்கை 5,000-ஐ நெருங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 14-க்கு பிறகும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளின் பரிந்துரைகளை, மத்திய அரசு கவனமாக பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தது.

Advertisment

"மத்திய அரசும் அதே எண்ணத்தோடு தான் சிந்திக்கின்றது, எவ்வாறாயினும், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்திய பிரதமர் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்பு, இறுதி முடிவை எடுப்பார். பிரதமரின் முடிவை மாநில அரசுகள் பின்பற்றும் என்று உறுதியக நம்புகிறோம்,”என்றும் கூறியது .

இதற்கிடையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான கோவிட்-19 குறித்த முறைசாரா அமைச்சர்கள் குழு (GoM) விவசாயத் துறையில் செயல்படுத்தப்படும்  நடவடிக்கைகள் குறித்து, நேற்று விவாதித்ததாக கூறப்படுகிறது.

பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து, வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள் (அவற்றின் விநியோகம் உள்ளிட்டவை), பழுது நீக்குதல், நெடுஞ்சாலைகளில் உள்ள லாரி பழுது நீக்கும் கடைகள் (எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ளவற்றுக்கு முன்னுரிமை), ஆகியவை வேளாண் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 50 சதவீத தொழிலாளர்களுடன் கூடிய தோட்டங்களைக் கொண்ட தேயிலைத் தொழிலும் இயங்கலாம் என ஏற்கனவே உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், களத்தில் உள்ள விவசாயிகளிடம் இந்த தகவல் ஒழுங்கான முறையில் சென்றைடைய வில்லை.  இது சரியான முறையில் தொடர்பு கொள்ளப்பட வேண்டும். இது அறுவடை காலமாக இருப்பதால், செயல்முறையை எளிதாக்குவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. மாநிலங்கள் விவசாயம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,” என்று அமைச்சர்கள் குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாகவும்  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன்  காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி  கலந்துரையாடினார். அப்போது, முடக்கநிலை காலம் முடிந்ததும் மீண்டும் மக்கள் திரள்வதை பல கட்டங்களாக அனுமதிப்பதற்கான பொதுவான ஓர் அணுகுமுறையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

எவ்வாராயினும், கோவிட்-19 எண்ணிக்கையை அதிகமாக பதிவு செய்த மகாராஷ்டிர உட்பட ஏழு மாநிலங்கள் முடக்கநிலை காலம் முடிந்த சில காலத்திற்கு பிறகும், கட்டுபாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று சுட்டிக்கட்டியுள்ளன.

 

முடக்க நிலை காலத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பதற்கு  ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின்பு தான் ஒரு தெளிவு கிடைக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிகின்றன. கொரோனா வைரஸ் டெஸ்ட் செயல்முறையை  முடுக்கிவிடப்பட்டு, பரவலின் தாக்கத்தை தெரிந்து கொள்வது மிக முக்கியம் என்றும் கூறப்படுகிறது .

"இந்தியாவில் இதுவரை 284 மாவட்டங்களில் மட்டுமே கோவிட்- 19 பரவல் கண்டறியப்பட்டுள்ளது . அதாவது, நாட்டின் பாதிக்கும் அதிகமான மாவட்டங்களில் இந்த பரவல் இல்லை. எனவே , ஏப்ரல் 14 க்குப் பிறகு, இந்தியாவில் சுமார் 60 சதவீத பகுதிகளில் சற்று தளர்வு அறிவிக்கப்படும் என்று நம்பலாம். ஏனெனில், கடுமையான கட்டுப்பாடுகள் காலவரையின்றி தொடர முடியாது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொது முடக்கம்  நீட்டிக்கப்படும் என்ற யூகங்களை அகற்ற மத்திய அரசாங்கம் பலமுறை முயற்சிதையும் நம்மால் காண முடிகிறது. உதாரணமாக, சுகாதார அமைச்சகத்தின்  இணை செயலாளர் லாவ் அகர்வால், செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபாவின் விளக்கத்தை மேற்கோள் காட்டி, நீட்டிப்புக்கான சாத்தியக்கூறுகளை மறுத்தார்.

லாவ் அகர்வால்,"மாநிலங்கள் பொது முடக்க நிலை  தொடரவேண்டும் என கேட்பது  உண்மைதான். அவை அனைத்தும் ஆராயப்படுகின்றது. தீர்ககமான ஒரு முடிவு எடுக்கப்படும் போது, ​​நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்,”என்று கூறினார்.

இருப்பினும், அதே நேரத்தில்,"பாதிக்கப்பட்ட ஒருவர் 406 பேருக்கு தொற்றை பரப்பக்க்கூடும். ஆனால், பொது முடக்க காலகட்டங்களில், அந்த எண்ணிக்கை மூன்று பேருக்கும் குறைவாகவே உள்ளது"  என்ற அமெரிக்கா ஆய்வையும் அகர்வால் மேற்கோள் காட்டியிருந்தார்.

தனது மாநிலத்தில் முடக்கநிலை காலம் முடிக்கப்பாடு, மக்கள் திரள்வு பல கட்டங்களாக  அனுமதிக்கப்படும் என்று நேற்று வரை கூறி வந்த சிவராஜ் சவுகன், திடீரென்று பொது முடக்கம் நீட்டிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இதுவரை 229 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில்,நேற்று நடைபெற்ற அமைசச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி சதானந்த் கவுடா ,நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை  அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் அடங்குவர்.

இந்த அமைசச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையாகக் கொண்டு, பிரதமருக்கு ராஜ்நாத் சிங் உள்ளீடுகளை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று பிரதமர் தலைமயில், பாராளுமன்ற  அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளுக்கு மட்டும் கூடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூடத்தில் பேசிய நரேந்திர மோடி, அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அத்தியாவசியப் பண்டங்களுக்கான சட்டம் 1995-ஐ செயல்படுத்துவதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம் இங்கே.

20.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் :  கொவிட்-19 முடக்கநிலை காலத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் மார்ச் 24இல் இருந்து 14 நாட்களில், 721 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 20.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை நாடு முழுக்கக் கொண்டு சென்றுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் போதிய உணவு தானியங்களை இந்திய உணவு கார்ப்பரேஷன் (எப்.சி.ஐ.) அனுப்பி வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும், அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் எப்.சி.ஐ.யிடம் இருந்து உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளும் பணியை பல மாநிலங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அடுத்த சில தினங்களில் மற்ற மாநிலங்களும் உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கிவிடும். மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரையில் மொத்தம் 658 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 18.42 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதுதவிர 1.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 63 சரக்கு ரயில் பெட்டிகளில் கடந்த ஏழாம் தேதி  ஏற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், விவரங்களுக்கு  இங்கே  இங்கே  கிளிக் செய்யவும்

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment