Abha Goradia :
புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா எடுத்த அதிரடி முடிவு மும்பையில் இருக்கும் சாதாரண பேப்பர் கடை நடத்தும் ஊழியரின் வாழ்வை எப்படி பாதித்தது? என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முகமது அலி சாலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பேப்பர் கடை நடத்தி வருகிறார் முகமது ஆசிப். 50 வயதாகும் இவர் சிறு வயதில் இருந்தே இந்த கடையில் தனது தந்தை அப்துல்லா ஹாஜி அலி முகமதுkகு உதவியாக இருந்து வந்தார். அவரின் மறைவுக்கு பின்பு முகமது ஆசிஃப் தனது விடா முயற்சியால் கடையை வழி நடத்தி வருகிறார்.
இந்த பேப்பர் கடையின் சிறப்பம்சம் பாகிஸ்தானில் வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் இலக்கியங்கள் இங்கு கிடைக்கும். இந்தி மற்றும் உருது 2 மொழிகளிலும் பாகிஸ்தான் நாளிதழ்களை இங்கு வாங்கலாம். இவருக்கு ரேகுலர் கஸ்டமர்கள் அதிகளவில் உண்டு. கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், இஸ்லாமியர்கள், குடும்ப தலைவிகள் என பலரும் இந்த கடைக்கு தேடி வந்து அவர்களுக்கு தேவையான பாகிஸ்தான் இலக்கியங்களை வாங்கி செல்வார்கள்.
பாகிஸ்தான் எழுத்தாளர்களால் எழுதப்படும் மிகச் சிறந்த நாவல்கள் மற்றும் கட்டுரைகள் முகமது ஆசிஃபின் கடையில் அதிகம் வியாபாரம் ஆகக் கூடியவை. எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்றுக் கொண்டிருந்த இவரின் வாழ்வு மற்றும் தொழில் இப்போது கயிற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது.
ஆம், புல்வாமாவில் 40 இந்திய வீரர்களை பலிவாங்கிய தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி இருந்த ‘வர்த்தக நட்பு நாடு' என்ற சிறப்பு அந்தஸ்தை கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய அரசு ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிசெய்தார்.
சரியாக பிப்ரவரி 19 ஆம் தேதி முகமது ஆசிப் வழக்கம் போல் கராச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் விமானம் மூலம் மும்பைக்கு வந்தடையும் பாகிஸ்தான் மாத இதழ்கள் மற்றும் சில நாவல்களை பெற்றுக் கொள்ள சென்றார். அப்போது வரை அவருக்கு சுங்க வரி 200 சதவீதமாக அதிகரிக்கப்படுள்ள தகவல் அவருக்கு தெரியாது,
இந்நிலையில், தன்னுடைய பெயரில் வந்த 40 கிலோ எடையுள்ள பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை எடுத்துக் கொண்ட ஆசிப் ஊழியர்களிடம் 5000 ரூ. பணத்தை செலுத்தினார். அப்போது தான் அந்த ஊழியர்கள் சுங்க வரி 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டு விட்டதாக கூறி முகமது ஆசிஃபிடம் 40 கிலோவிற்கு 2 லட்சம் கேட்டுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிப், இது எப்படி சாத்தியம், அதற்காக நான் ஒரு பேப்பரை 450 ரூ. விற்க முடியுமா? அப்படி விற்றால் யார் வாங்கி படிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவரின் விவாதம் அங்கு செல்லுபடியாகவில்லை. மன வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே வீடு திரும்பினார் ஆசிப்
இதனால் மனமுடைந்த அவர், கராச்சியில் இருந்து வந்த பேப்பர்களை மீண்டும் திரும்பி அனுப்புமாறு தினமும் கஸ்டம் ஆபிஸூக்கு சென்று வருகிறார். ஆனால் தேர்தல் முடிந்த பின்பு தான் எந்தவொரு பொருளை திரும்பி அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
உருது இலக்கியங்கள் மற்றும் நாவல்களால் நிரம்பி காணப்படும் பாரம்பரியமான ஆசிஃபின் கடை இன்று களையிழந்து காணப்படுகிறது. அவரிடம் இருக்கும் நிச்சயமாக கிடைக்கும் என்று நம்பி வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
பக்கிஜா, கவாடியன் மற்றும் ஷுவா ஆகியோரின் புகப்பெற்ற புத்தகங்கள் ஆசிப்பின் கடையில் வெறும் 100 ரூ வாங்கிட முடியும். தி டெய்லி ஜங், நயா வக்ட், டான் மற்றும் ஜசரட் போன்ற பத்திரிகைகளும் 30 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டன. பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தலைப்பை பொருத்து சில நாட்களில் விலையை நிர்ணியிப்பார் ஆசிப்.
இந்த 70 ஆண்டுகளில் முதன்முறையாக இதுப்போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி வருத்தப்படுகிறார் முகமது ஆசிப்.