Advertisment

Demonetisation Anniversary: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன்? - காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்

India Banknote Demonetisation: கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Demonetisation Anniversary Live Update: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன்? - காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்

Demonetisation Anniversary Live Update: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன்? - காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்

Demonetisation anniversary : பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டு நிறைவு நாள் இன்று. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

Advertisment

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

Demonetisation 2nd Anniversary : பணமதிப்பிழப்பு 2ம் ஆண்டு நிறைவு நாள்

இந்த நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு இன்றுடன் 2ம் ஆண்டு நிறைவடைகிறது. இந்த நடவடிக்கை இந்திய மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது. அதன் லைவ் அப்டேட் உங்களுக்காக...

02: 30 PM : பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸூக்கு பாஜக 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அந்த 10 கேள்விகளில் சில...

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கிறதோ அப்போது காங்கிரஸ் பதறுவது ஏன்? போராட்டம் நடத்துவது எதற்காக?

கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது காங்கிரஸ் அதனை ஆதரிக்க முன் வராதது எதனால்?

வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கும்போது, வளர்ச்சிக்கு எதிரான அரசியலை காங்கிரஸ் முன்னெடுப்பது எதனால்?

அனைத்து கேள்விகளையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

01:50 PM : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒவ்வொரு தனிமனிதரையும் வயது, பாலினம், மதம், தொழில் எனப் பாகுபாடு பார்க்காமல் பாதித்துள்ளது. கொடுமையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசைக் கடுமையாக விளாசியுள்ளார்.

01: 15 PM : தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், "மக்களின் பணம் செல்லாது என்று கூறப்பட்டு அவர்கள் தெருவிற்கு கொண்டு வரப்பட்டார்கள். முடிவில்லாத வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள், பல இந்தியர்கள் வங்கிக்கு வெளியே பலியானார்கள், பலர் வேலையை இழந்தனர், பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டது, இந்திய பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.. இந்த நடவடிக்கை ஒரு தனி மனிதர் செய்த பேரழிவு'' என்று தெரிவித்துள்ளார்.

12:15 PM : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாததாக்கியது மட்டுமின்றி இந்தியப் பொருளாதாரமும் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறிய முதலீட்டில் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இந்த துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

11:30 AM : பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ‘இன்றுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு வருடங்கள் முடிவடைகிறது. மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இந்திய நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த எடுக்கப்பட்ட முடிவாகும். நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பலரும் சிக்கியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

10:30 AM : இன்று 2ம் ஆண்டு நிறைவையடுத்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

10:10 AM : அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த் அறிவிப்பில், சுமார் 99.3 சதவீதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

9:45 AM : பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், நாடே ஸ்தம்பித்தது. வீட்டில் வைத்திருக்கும் பழைய நோட்டுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் நின்றனர். மிடில் கிளாஸ் மற்றும் ஏழை மக்கள் பலரும் இந்த அறிவிப்பால் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.

9:20 AM : 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தொலைப்பேசி மூலம் பேசுவார். ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பேசிய பிரதமர், அதே நாள் நள்ளிரவு முதல், அதாவது நவம்பர் 9ம் தேதி 2016 முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். அனைவரும் அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிக்கு எடுத்துச் சென்று மாற்றிக் கொள்ளுமாறு அறிவித்தது.

Narendra Modi Demonitisation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment