‘India desires cordial relations with Pakistan’, PM Modi writes to Imran Khan: பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவையே விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதமும் விரோதமும் இல்லாத நம்பிக்கையான சூழல் இருப்பது அவசியமாகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தான் தினத்திற்கு அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இக்கடிதத்தை எழுதியுள்ளார் மோடி.
அண்டை நாடாக, பாகிஸ்தானுடன் நல்லுறவை வைத்துக் கொள்ளவே இந்தியா விருகிறது. அதற்கு பயங்கரவாதமும் விரோதமும் இல்லாத நம்பிக்கையான சூழல் இருப்பது அவசியமாகிறது என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் மோடி.
கொரோனா வைரஸ் தொற்று சவாலை சமாளிக்க கானுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நேர்மறையான உறவு மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. கடந்தமாதம் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் லைன் ஆஃப் கண்ட்ரோலில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது.
திங்கள் கிழமை அன்று பாகிஸ்தான் அதிகாரிகள் நிரந்தர சிந்து நதி ஆணையம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இது தான் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான முதல் ஆலோசனை கூட்டம்.
வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கடந்த வாரம், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் அர்த்தமுள்ள ஆலோசனைக் கூட்டங்கள், உகந்த சூழலில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். இஸ்லமாபாத்திற்கு தான் அத்தகைய பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரத்தை இந்தியா ரத்து செய்த பிறகு இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்டது. இந்திய இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லீம் லீக் மார்ச் 23, 1940 அன்று லாகூரில் நிறைவேற்றிய தீர்மானத்தை குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆரிஃப் ஆல்விக்கு இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil