ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உயர் அலுவலர்களுடன் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு விருந்தளித்தார். தீவு நாட்டில் (இலங்கையில்) ராமாயண பாதை அமைக்க இந்தியா உதவும் வழிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் மற்றும் அவரது குழுவினருடன் ஜா கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் ஆலோசனை மேற்கொண்டார்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது குறித்து இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அதிகராப்பூர்வ X பக்கத்தில், "இலங்கையில்
ராமாயணப் பாதை அமைக்க மற்றும் அதன் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது P2P (people-to-people) இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் ராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் ஜா கலந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/indian-envoy-sri-lanka-shri-ram-janmabhoomi-teerth-kshetra-trust-officials-9283713/
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று #ராமாயண பாதை அமைக்கும் திட்டம் தொடங்கும் போது இந்தியா-இலங்கை நட்பு மலருகிறது. ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜ், NSA @SagalaRatnayaka, கிரிக்கெட் ஐகான் @Sanath07 மற்றும் பிற உயரதிகாரிகளுடன் இணைந்து, இலங்கையில் #ராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் தூதர் கலந்து கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.
ராமாயணம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும் மற்றும் இந்து மதத்தின் முக்கியமான உரையாகும். ராமாயணப் பாதையில் இலங்கையில் 52 இடங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil