பாக்., தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

வெளியுறவு அமைச்சகம் கூறப்படும் நடவடிக்கைகளின் தன்மையை விரிவாக விளக்கவில்லை.

வெளியுறவு அமைச்சகம் கூறப்படும் நடவடிக்கைகளின் தன்மையை விரிவாக விளக்கவில்லை.

author-image
WebDesk
New Update
pakistan commission

புதுடெல்லியில் " அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதாக" கூறி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியா மே 13 வெளியேற்றியது. மேலும், 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு உத்தரவிட்டது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்தது.

Advertisment

இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர் ஒருவரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் "அவரது சிறப்புரிமைக்கு பொருந்தாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக persona non grata" என்று அறிவித்தது. அந்த அதிகாரியையும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டது.

"இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது," என்று பாகிஸ்தான் அமைச்சகம் எக்ஸ் தளத்தில் அறிவித்தது.

இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் அதிகாரி சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சில கைதுகளுடன் தொடர்புடையவர். அவரது வெளியேற்றம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை 29 ஆக குறைத்துள்ளது.

Advertisment
Advertisements

பஞ்சாப் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது, டெல்லி தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் அதிகாரியுடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

நம்பகமான உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய இராணுவத்தின் நகர்வுகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு கசியவிட்டதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மலேர்கோட்லாவைச் சேர்ந்த குசாலா (31) மற்றும் யாசின் முகமது ஆகியோர் ஆவர்.

அம்ரித்சர் கிராமப்புற காவல்துறையினர் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இராணுவ cantonment பகுதிகள் மற்றும் விமானப்படை தளங்களின் முக்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை கசியவிட்டதாக கூறி ஃபலாக்ஷெர் மசிஹ் மற்றும் சூரஜ் மசிஹ் ஆகிய இருவரை கைது செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா தனது புதுடெல்லி தூதரகத்திலிருந்து 25 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றியது. இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டது. பாகிஸ்தானின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட ஆயுதப் படைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர்.

இதற்கு பதிலடியாக, இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்திலிருந்து 25 இந்திய தூதரக அதிகாரிகளையும் இந்தியா திரும்ப அழைத்தது.

India Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: