Advertisment

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு; இந்தியாவுக்கு கடைசி இடம்

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 வெளியீடு; கடைசி இடத்தில் இந்தியா; பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம் நாடுகளுக்கு இந்தியாவை விட அதிக மதிப்பெண்கள்

author-image
WebDesk
New Update
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு; இந்தியாவுக்கு கடைசி இடம்

Environment Performance Index: India fails green test, finishes at bottom: சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு-2022 (EPI) இல், தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு என்பது, சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் நாடுகளின் நிலைத்தன்மையை அளவிடும் ஒரு சர்வதேச தரவரிசை பட்டியலாகும்.

Advertisment

18.9 என்ற சொற்ப மதிப்பெண்களுடன், பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பின்னால், தரவரிசையில் இந்தியா 180வது இடத்திற்கு வந்துள்ளது. கடைசி 5 இடங்களை பிடித்துள்ள நாடுகள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் மிகவும் குறைந்த செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன.

EPI இன் படி, சட்டத்தின் ஆட்சி, ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க செயல்திறன் ஆகியவற்றிலும் இந்தியா குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது.

EPI-2020 இல் இந்தியா 27.6 மதிப்பெண்களுடன் 168வது இடத்தைப் பிடித்தது. EPI-2020 இல், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் மையம் மற்றும் சர்வதேச புவி அறிவியல் தகவல் நெட்வொர்க்கிற்கான கொலம்பியா பல்கலைக்கழக மையம் ஆகியவற்றுடன் இணைந்து உலக பொருளாதார மன்றத்தால் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறியீட்டாக 2002 இல் EPI தொடங்கப்பட்டது.

publive-image

“11 உள்ளடக்க வகைகளில் 40 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, EPI ஆனது 180 நாடுகளை காலநிலை மாற்ற செயல்திறன், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலின் உயிர்ச்சக்தி ஆகியவற்றில் தரவரிசைப்படுத்துகிறது. இந்த குறிகாட்டிகள் நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கை இலக்குகளுக்கு நாடுகள் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பதை தேசிய அளவில் அளவிடுகின்றன,'' என்று EPI அறிக்கை கூறுகிறது.

ஒட்டுமொத்த EPI தரவரிசை எந்த நாடுகள் சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாக எதிர்கொள்கின்றன என்பதைக் குறிக்கிறது.

"நல்ல கொள்கை முடிவுகள் செல்வத்துடன் (தனிநபர் ஜிடிபி) தொடர்புடையவை" என்று அறிக்கை கண்டறிந்துள்ளது, அதாவது பொருளாதார செழிப்பு என்பது விரும்பத்தக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் முதலீடு செய்வதை நாடுகளுக்கு சாத்தியமாக்குகிறது. "சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குடையின் கீழ் உள்ள உள்ளடக்க வகைகளுக்கு இந்த போக்கு குறிப்பாக சரியாக இருக்கிறது, ஏனெனில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், சுற்றுப்புற காற்று மாசுபாட்டைக் குறைத்தல், அபாயகரமான கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் பொது சுகாதார நெருக்கடிகளுக்கு பதிலளிப்பது ஆகியவை மனித நலவாழ்வுக்கு பெரிய நன்மையை அளிக்கிறது,'' என்று அறிக்கை கூறுகிறது.

தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலில் வெளிப்படும், பொருளாதார செழுமைக்கான நாட்டம், பெரும்பாலும் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிர்ச்சக்தியில் அதிக மாசுபாடு மற்றும் பிற விகாரங்களை குறிக்கிறது, குறிப்பாக வளரும் நாடுகளில், காற்று மற்றும் நீர் வெளியேற்றம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும், என்று அறிக்கை கூறுகிறது. சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகள் நிலைத்தன்மையின் அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்தியுள்ளன, அதே நேரத்தில் பின்தங்கிய நாடுகள் சீரற்ற செயல்திறனைக் கொண்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

இதையும் படியுங்கள்: பாதுகாப்புத்துறையில் ரூ.76,390 கோடி கொள்முதல்; இந்திய நிறுவனங்களிடம் வாங்க ஒப்புதல்

"பொதுவாக, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என்பவர்கள், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் நீண்டகால கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துபவர்களாக வெளிப்படுகின்றனர். சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் தொடர்புடைய பலன்களுடன், தங்கள் மின்சாரத் துறைகளை டிகார்பனைஸ் செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன என்று தரவு மேலும் தெரிவிக்கிறது,'' என்று அறிக்கை கூறுகிறது.

அறிக்கை கூறுகிறது: “இந்தியா மற்றும் நைஜீரியா உட்பட உலகளாவிய தெற்கில் உள்ள பல முக்கியமான நாடுகள் தரவரிசையில் கீழே உள்ளன. அவற்றின் குறைந்த EPI மதிப்பெண்கள், காற்று மற்றும் நீர் தரம், பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கியமான சிக்கல்களில் அதிக முன்னுரிமையுடன், நிலைத்தன்மை தேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது. நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட பிற பின்தங்கிய சில நாடுகள் உள்நாட்டு அமைதியின்மை போன்ற பரந்த சவால்களை எதிர்கொள்கின்றனர், மேலும் அவர்களின் குறைந்த மதிப்பெண்கள் அனைத்தும் பலவீனமான நிர்வாகத்திற்கு காரணமாக இருக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment