India fights Coronavirus : CTU buses have curtain between passengers and driver - ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் நடுவே ஒரு மெல்லிய திரை : கொரோனா பரவலை தடுக்க சண்டிகர் புது பாணி | Indian Express Tamil

ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் நடுவே ஒரு மெல்லிய திரை : கொரோனா பரவலை தடுக்க சண்டிகர் புது பாணி

இந்த நடவடிக்கை பேருந்தில் பயணிக்கும் இரு தரப்பினர் உயிரையும் காக்கும் வகையில் உள்ளது என்று மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

India fights Coronavirus : CTU buses have curtain between passengers and driver
India fights Coronavirus : CTU buses have curtain between passengers and driver

India fights Coronavirus: CTU buses have a curtain between passengers and driver : இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. 55 நாட்களை கடந்தும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கில் தற்சமயம் அனைவரும் இருந்து வருகின்றோம்.  இந்த சூழலில் பொதுப் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க : ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” : கொரோனாவையும் தோற்கடிக்கும் பேத்தியின் பாசம்!

இந்நிலையில் பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் பேருந்தை இயக்குபவர்களுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்ய சண்டிகர் மாநிலத்தில் இருக்கும் அரசுப் பேருந்துகளில் ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே திரையை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொதுப்போக்குவரத்து துவங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை மேற்கொண்டு வருகிறது சண்டிகர் அரசு.

மேலும் படிக்க : மேற்கு வங்கத்தில் விடாமல் பெய்யும் மழை : ”உம்பன்” சிறப்பு புகைப்படத் தொகுப்பு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: India fights coronavirus ctu buses have curtain between passengers and driver