scorecardresearch

புதிய கொரோனா வகை XE மாறுபாடு; மும்பையில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு?

புதிய கொரோனா வகை XE மாறுபாடு; ஒருவருக்கு தொற்று பாதிப்பு என மும்பை மாநகராட்சி அறிவிப்பு; ஆனால் மத்திய அரசு மறுப்பு

புதிய கொரோனா வகை XE மாறுபாடு; மும்பையில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு?

After BMC claims India’s first case of Covid variant XE found, Centre says no evidence at present: புதிய கொரோனா வகை XE மாறுபாட்டின் இந்தியாவின் முதல் தொற்று மும்பையில் கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம் “தற்போதைய சான்றுகள் புதிய மாறுபாடு இருப்பதைக் குறிக்கவில்லை” என்று கூறியது.

பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் சென்று வந்த 50 வயதான முழு தடுப்பூசி போடப்பட்ட பெண்ணுக்கு, புதிய கொரோனா வகை XE மாறுபாட்டின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் XE மாறுபாட்டின் முதல் பாதிப்பு.

மற்ற ஓமிக்ரான் பிறழ்வுகளை விட XE மாறுபாடு 10 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று நம்பப்படுகிறது.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) வழங்கிய தகவலின்படி, படப்பிடிப்புக் குழுவில் ஆடை வடிவமைப்பாளரான அந்த பெண் பிப்ரவரி 10 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தார்.

அந்த பெண், மும்பைக்கு வந்தபோது, அறிகுறியற்றவராக இருந்தார் மற்றும் கொரோனா சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. “ஆனால் மார்ச் 2 அன்று, புறநகர் நோயறிதல்கள் நடத்திய வழக்கமான சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஒரு ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்,” என்று BMC அறிக்கை வெளியிட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள், அடுத்த நாள் சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்று மாறியது.

பின்னர், மாநகராட்சியால் நடத்தப்படும் கஸ்தூரிபா மருத்துவமனையில் BMC இன் பதினொன்றாவது தொகுதி மரபணு வரிசைமுறையில், புதிய மாறுபாடான XE துணை வகை அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 230 மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டன, அவற்றில் 228 மாதிரிகளுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: இந்திய தூதரை அழைத்து பேசிய பிலிப்பைன்ஸ் அரசு

இருப்பினும், மத்திய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, மகாராஷ்டிராவின் செய்தித் தகவல் பணியகம் பின்னர் ஒரு ட்வீட்டில், “#XEVariant என்று கூறப்படும் மாதிரி தொடர்பான FastQ கோப்புகள் INSACOG இன் மரபணு நிபுணர்களால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த மாறுபாடு ‘XE’ மாறுபாட்டின் மரபணு படத்துடன் தொடர்புபடுத்தவில்லை என்று பதிவிட்டது.

கொரோனா பணிக்குழு உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி XE மாறுபாட்டால் பீதி அடையத் தேவையில்லை என்று உறுதியளித்தார். “இது நுரையீரலை உள்ளடக்காத ஓமிக்ரானின் பிறழ்வு என்பதால், XE மாறுபாடு கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது. ஆனால் குறிப்பாக நெரிசலான இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, ”என்று அவர் கூறினார்.

இந்தியாவில் 1,086 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4,30,30,925 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,21,487 ஆகவும் உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. சிகிச்சையில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 11,871 ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ள பாதிப்புகள் மொத்த தொற்றுநோய்களில் 0.03 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் தேசிய கொரோனா விகிதம் 98.76 சதவீதமாக உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸானது சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவே உள்ளது என்றும், கண்காணிப்பைக் குறைக்க கூடாது என்றும் வலியுறுத்தும் அதே வேளையில், இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய திரிபு, கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை விட அதிகமாக பரவக்கூடியதாகத் தெரிகிறது.

WHO, அதன் சமீபத்திய புதுப்பிப்பில், XE மறுசீரமைப்பு (BA.1-BA.2) ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது மற்றும் 600 க்கும் மேற்பட்ட மாதிரிகள் பதிவாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் தொடர்ச்சியான சரிவைக் கண்காணித்த சில நாட்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் (MHA) கடந்த மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: India first case of new covid 19 variant xe reported from mumbai