/indian-express-tamil/media/media_files/2025/04/28/6BVr03aYxZemUuYmBwpd.jpg)
இந்திய கடற்படைக்கு 26 ரபேல்-எம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் கையெழுத்திட்டன.
இந்தியா, பிரான்ஸ் இடையே 2016 ஆம் ஆண்டு ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது. இந்த சூழலில், பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India, France sign deal for procurement of 26 Rafale-M for Navy
இந்நிலையில், பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இன்று திங்கள்கிழமை கையெழுத்தாகியுள்ளது. 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் இடையே காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படைக்கு புதிய ஆயுதங்களையும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 26 ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும்.
இந்திய விமானம் தாங்கிக் கப்பலின் ஒரு அம்சமான ஸ்கை ஜம்ப் மூலம் விமானம் ஒரு குறுகிய தளத்திலிருந்து புறப்பட்டு தரையிறங்க முடியும் என்பது இந்தியாவிற்கான முக்கிய மேம்பாடாக இருக்கும் என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
பிரெஞ்சு விமானம் தாங்கிக் கப்பலான சார்லஸ் டி கோல், நீராவி கவண்கள் மற்றும் கைது கியர்களுடன் கூடிய பெரிய, தட்டையான விமான தள வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்ற ஆயுதங்களுடன், ASTRA Mk1 வான்-க்கு-காற்று பியாண்ட் விஷுவல் ரேஞ்ச் ஏவுகணை விமானத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.