Advertisment

ஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்

இந்த ஆண்டு  ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியாவிலிருந்து உறுதியான தகவல் இல்லாத நிலையில்,ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்களின்  முன் பணத்தைத் திருப்பித் தர இந்திய ஹஜ் கமிட்டி  முடிவு செய்துள்ளது.

Advertisment

இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி, மக்ஸூத் அகமது கான் இதுகுறித்து வெளியிட்ட சுற்றறிக்கையில்,"இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சவூதி அரேபியா கடந்த மார்ச் 13-ம் தேதி அறிவித்தது. இந்தியாவில்  இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஆயத்த பணிகள் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரேபிய அதிகாரிகள் மேற்படி நடவடிக்கைகள் குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

ஹஜ் பயணம் குறித்து பலர் எங்களிடம் விசாரித்து  வருகின்றனர், கவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர். எனவே, ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்ய விரும்பினால் முழுத் தொகையைத் திருப்பித் தரப்படும். இது குறித்த படிவத்தை ஹஜ் கமிட்டி வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Haj Pilgrimage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment