சீனாவை விட புவியியல் அமைப்பு இந்திய விமானப் படைக்கு சாதகம் ஏன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சீனாவை விட புவியியல் அமைப்பு இந்திய விமானப் படைக்கு சாதகம் ஏன்?

லடாக் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்களுக்கு ராணுவ உதவியை வழங்கும் நோக்கில்,  தவுலத் பீக் ஓல்டி (டிபிஓ) விமானத் தளத்தில் 2013 ஆம் ஆண்டில்  கேரியர் ஹெர்குலஸ் ரக ராணுவ விமானம் தரையிறங்கியதில் இருந்து, அண்மையில் தரையிறக்கிய அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வரை, லடாக்கில் இந்தியா  விமானப்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

Advertisment

கல்வான் நிலைப்பாட்டிலிருந்து எழும் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க இந்திய விமானப் படை தயார் நிலையில் உள்ளது என்று சனிக்கிழமை விமானப் படைத்  தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதௌரியா தெரிவித்தார்.

புவியியலமைப்பு ரீதியாக இந்தியா விமானப்படை கூடுதல் நன்மையைப் பெற்றிருந்தாலும், அதனை பயன்படுத்துவது தொடர்பான முடிவை அரசாங்கம்  பரிசீலித்த பின்னர் எடுக்க வேண்டும் என்று  ஆய்வாளர்கள் தி சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியா ராணுவத்திற்கு ராணுவ உதவிகளை வழங்க  விமானப்படை  பயன்படுத்துவது குறித்து ஒருபோதும்  சிந்திக்கப்படவில்லை என்று இந்திய விமானப் படையின் ஆய்வு மையத்தின் ஏர் வைஸ் மார்ஷல் கே.கே நோஹர் (ஓய்வு) தெரவித்தர். இருப்பினும்,“நிர்பந்திக்கப்படும் போது, அது சாத்தியமானது ” என்று தெரிவித்தார்.

Advertisment
Advertisements

லே மற்றும் தோயிஸ் விமானத் தளங்களில் சமீப நாட்களாக துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை அதிகளவு  அணிதிரட்டப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மோதல் உண்டாகும் சூழலில், சண்டைப் பகுதியில் கூடுதல் துருப்புகளையும், உபகரங்களையும் அனுப்புவதில் இந்த தளங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோஹர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னதாக, உலகின் அதிநவீன ஆயுதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டரையும், அதிக கன ரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ஹெலிகாப்டரையும் இந்தியா விமானப் படை லடாக் பகுதியில் நிறுத்தியது. மார்ச் 2019 இல் சண்டிகரில் உள்ள ஐ.ஏ.எஃப் விமான தளத்தில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டது.

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் சீன விமான சக்தி குறித்து பி.எச்.டி செய்துவரும், விமான சக்தி ஆய்வுகளுக்கான    மையத்தின் முன்னாள் மூத்த நிபுணர் கேப்டன் ரவீந்தர் எஸ் சத்வால் கூறுகையில்,"எல்லைப் பகுதியைப் பொறுத்த வரையில்  சீன விமானப்படையை விட புவியியல் ரீதியான அனுகூலத்தை  இந்தியா விமானப்படை கொண்டுள்ளது. சீனர்களிடம் 2,100 போர் விமானங்கள் உள்ளன ( இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்) இந்திய விமானப் படையிடம்  850 போர் விமானங்களே உள்ளன. இருப்பினும், இந்த போர் ரக விமானங்களை பயன்படுத்த எல்லைப் பகுதியில் விமானத் தளங்கள் அணுகும் முறையில் இருக்க வேண்டுனம். இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான விமான தளங்களை சீனா கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவைகள் 10,000 அடி உயரத்தில் உள்ள திபெத் பீடபூமியில் உள்ளன,”என்று அவர் கூறினார்.

இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதியில் ஏழு இரட்டை பயன்பாட்டு கொண்ட விமானநிலையங்கள் சீனா கொண்டுள்ளது. இவை அனைத்திலும் பொதுமக்கள் விமானங்கள் தரையிறக்குகின்றன.

காஷ்கர் மற்றும் ஹோடன் பகுதியைத் தவிர்த்து, மற்ற விமானத் தளங்கள் அனைத்தும் உயரத்தில் உள்ளது. மேலும்,   சர்ச்சைக்குரிய கட்டுப்பாடு எல்லைக் கோடு பக்ஹ்டியில் இருந்து மிகத் தொலைவில் உள்ளன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஏழு விமானத் தளங்களை மட்டும் வைத்துக் கொண்டு, 2,100 போர் ரக விமானங்களை நீங்கள் ராணுவ சேவைக்கு பயன்படுத்த முடியாது. அதிகபட்சமாக, 300 போர் விமானங்களை மட்டுமாவது உட்படுத்தலாம். இந்தியாவின் மேற்கு எல்லையில், சீனாவை விட இருமடங்கு  எண்ணிக்கையில் விமானத் தளங்கள் உள்ளன. இவை கடல் மட்டத்தில் இருப்பதால், புவியியல் ரீதியாக நாம் அதிகம் பயனடைகிறோம். மேலும், அதிக எடையுள்ள வெடுகுண்டு சுமைகளை இந்திய விமானப் படையால் இயக்க முடியும்,”என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: