Advertisment

தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூருவில் கிரிப்டோ வர்த்தகத்தில் ரூ.70 கோடி மோசடி

கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இந்த மோசடிகளின் வெற்றிக்குக் காரணம் என்று குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவல் கண்காணிப்பாளர் சுமன் டி பென்னேகர் கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
crypto

கிரிப்டோகரன்சி மோசடி

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டும் கிரிப்டோ வர்த்தக மோசடியில் ரூ.70 கோடி மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி, பெங்களூரை சேர்ந்த 28 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு லில்லி” என்பவரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. தற்செயலாக தொடங்கிய இந்த உரையாடல் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நீடித்துள்ளது. இதில் அவர் இந்தியாவில் தொழில்நுட்பத்துறை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புவதாக கூறி தனக்கான நிதி சிக்கலையும் குறிப்பிட்டுள்ளார்.

இதை கேட்ட  லில்லி அவருக்கு கிரிப்டோகரன்சியை வாங்கி, வர்த்தகம் செய்யும் போர்ட்டலில் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த மென்பொருள் பொறியாளர் 3.5 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று வங்கிகளில் கடன் வாங்கி காதலிக்கு ரூ.25 லட்சம் கடன் கிடைக்கச் செய்துள்ளார். இதில் 59 லட்சத்தை இழந்தபோதுதான் அந்த பெங்களூருவாசி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதன் மூலம் பெங்களூரில் கிரிப்டோகரன்சி வர்த்தக மோசடிகளில் பலியாகியவர்களில் இந்த ஜோடியும் அடங்கும். மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் பெங்களூர் நகரத்தில் சைபர் கிரைம்களால் இழந்த ரூ. 274 கோடியில், சுமார் ரூ.70 கோடி (கிட்டத்தட்ட 25 சதவீதம்) கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பான மோசடிகளால் இழந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 624 சதவீதம் அதிகமாகும்.

உலகளாவிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமான குகோயின் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் 115 மில்லியன் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் கிரிப்டோகரன்சி தொடர்பான வழக்குகளை செயல்பாட்டின் முறையால் முறியடிப்பது கடினம் என்று பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த மோசடிகள் பொதுவாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மோசடி செய்பவர்கள் சில நிமிடங்களில் மிகவும் கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்குவதால், மக்கள் அவர்களின் வலையில் மிக எளிதாக விழுகிறார்கள் என்று கூறியுள்ளார்..

இது குறித்து விரியாக விளக்கம் கொடுத்த ஒரு அதிகாரி கூறுகையில், மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடலைத் தொடங்குகிறார்கள். அவர்கள் நம்பிக்கையின் அளவை பெற்றவுடன், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். இதன் மூலம் அதிக பயன் பெறலாம் மற்றும் நல்ல வருமானத்திற்கு உத்தரவாதம் இருக்கும் என்று கூறுவார்கள்.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் உண்மையான செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் ஒரு நல்ல தொகை முதலீடு செய்யப்பட்டவுடன், பிளாக்செயினில் பரிவர்த்தனைகள் மறைந்துவிடும். (இது பல இணைக்கப்பட்ட கணினிகளில் கிரிப்டோகரன்சி செலுத்துதல்களின் பதிவுகள் பராமரிக்கப்படும் ஒரு அமைப்பு) அதன்பிறகு அந்த தளங்கள் போலியானவை என்பது தெரியவரும்.

யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இந்த மோசடியை "அதிகமாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட மற்றும் தீவிர தொடர்பு கொண்ட மோசடி" என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் மொபைல் போன்களில் நாம் பெறும் ஃபிஷிங் செய்திகளைப் போலவே, கிரிப்டோகரன்சி மோசடி செய்திகளும் முதலீட்டாளர்களை நோக்கி மொத்தமாக அனுப்பப்படுகின்றன. சிலர் இந்த மோசடிகளுக்கு இரையாகின்றனர். பாதிக்கப்படக்கூடிய குடிமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய சமூக ஊடகங்கள் ஒரு சிறந்த கருவியாக இருக்கும் என்று நம்பவைக்கப்படுகிறார்கள். ”என்று கூறியுள்ளார்.

மோசடியான கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பாதிக்கப்பட்ட 23 வயதான பெங்களூரை சேர்ந்த ஒருவர்,   இன்ஸ்டாகிராமில் "சான்றளிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி வர்த்தகரின்" சுயவிவரத்தைப் பார்த்துள்ளார். அதன்பிறகு அந்த இளைஞன் அவரை தொடர்பு கொண்டபோது, 20-30 நிமிடங்களில் தனது முதலீட்டை இரட்டிப்பாக்க உத்தரவாதம் அளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் பற்றி கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளைஞர் உடனடியாக ரூ.5,000 முதலீடு செய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தனது முதலீட்டில் ரூ.10,400 செய்ததாக அவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது. ஆனால் அவர் தனது "லாபத்தை" திரும்பப் பெற வரி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று இருந்துள்ளது. அதன்பிறகு இரண்டே நாட்களில் ரூ.78,543 பணத்தை இழந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவல் கண்காணிப்பாளர் சுமன் டி பென்னேகர், கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இந்த மோசடிகளின் வெற்றிக்குக் காரணம் என்று குற்றம் கூறியுள்ளார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், லாக்டவுன் காலத்தின்போது, பலர் கிரிப்டோகரன்சிகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பினர். வருமானம் அதிகமாக இருந்ததால் பலர் பங்குகளை விட கிரிப்டோகரன்சியை தேர்வு செய்தனர். மக்கள் பரிமாற்றங்களை விட மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கி, தங்கள் பணத்தை இழந்தபோது பிரச்சினை தொடங்கியது.

மார்ச் 2021 இல், ட்விட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லாவை பிட்காயின்களில் செலுத்தலாம் என்று அறிவித்தபோது இதற்கான அலைகளை உருவாக்கினார். 2020 டிசம்பரில் சுமார் ரூ.17.72 லட்சமாக இருந்த பிட்காயின் மார்ச் மாதத்திற்குள் ரூ.44.54 லட்சமாக உயர்ந்தது. உலகெங்கிலும் உள்ள பலர் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதும் மஸ்க்கின் செல்வாக்கு உயர்ந்தது.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைபர் பீஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான வினீத் குமார் கூறுகையில், “இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது, ஆனால் அதிக தேவை உள்ளது. லாக்டவுன் காலத்தின் போது இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தபோது, ​​எங்கு முதலீடு செய்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் கிரிப்டோகரன்சிகள் செழித்துக்கொண்டிருந்தன. சமூக ஊடகங்களில் கிரிப்டோகரன்சிகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன. வருமானம் கவர்ச்சிகரமானதாக இருந்தது மற்றும் திரும்பப் பெறுவதற்கான நேரம் மிகவும் குறைவாக இருந்தது என்று கூறியுள்ளார்..

இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, காவல்துறை இணை ஆணையர் (குற்றம்) எஸ்.டி.சரணப்பா கூறுகையில், “சைபர் கிரைம் விஷயத்தில் பெயர் தெரியாதது (விசாரணையாளர்களுக்கு) மிகப்பெரிய சவாலாக உள்ளது. போலி சிம் கார்டுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் VPN (விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்) பயன்பாடு ஆகியவை இதை மிகவும் சிக்கலாக்குகின்றன. கிரிப்டோகரன்சி தளங்களில் வர்த்தகம் செய்வதற்கு முன் பொதுமக்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம், மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) நான்கு சைபர் கிரைம்களை கைது செய்தது. வழக்கு விவரங்களைப் பகிர்ந்து கொண்ட சரணப்பா, “குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 900 வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளார். அவர்களின் சொந்த மக்கள் நல்ல வருமானம் பெற்ற வாடிக்கையாளர்களாக நடித்துள்ளனர். மூன்றே மாதங்களில் அந்த நிறுவனம் ‘ஹீலியம்’ என்ற புதிய கிரிப்டோகரன்சியில் முதலீடு என்ற பெயரில் ரூ.20 கோடி வசூலித்தது. ஒரு நாளில், அவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தங்கள் விண்ணப்பத்தை அகற்றிவிட்டு பணத்தைப் பறிப்பதற்காக அனைத்து வாட்ஸ்அப் குழுக்களையும் மூடிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment