Advertisment

இந்தியா பெய்ஜிங்கை விட பன்மடங்கு பலமாக வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

நாட்டை பிளவுபடுத்த விரும்பும் நபர்களிடம் இருந்து மக்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று விஜயதசமி விழாவில் பேச்சு

author-image
WebDesk
New Update
China has now risen doesnt care what world thinks of it RSS chief

 Vivek Deshpande

Advertisment

India jolted China, must build ties to grow bigger than Beijing: RSS chief : ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாடினார் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத். கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளால் மிகவும் குறைவான அளவிலேயே தொணடர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய மோகன், லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் சீனா ஆடிப்போய் உள்ளது. அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி, சீனாவை காட்டிலும் அதிக வலிமை கொண்ட நாடாக இந்தியா உருமாற வேண்டும் என்று அறிவித்தார்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் வலிமை தரும் வகையில் அவர் மேசினார். யோகி ஆதித்யநாத்தின், மாநில அரசுக்கு எதிராக ஒரு சர்வதேச சதி நிகழ்கிறது என்ற கோட்பாட்டினை ஆதரிக்கும் வகையில் பேசினார். ஹத்ராஸ் குறித்தோ, வேளாண் சட்டங்கள் குறித்தோ நேரடியாக அவர் பேசவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து நிச்சயமற்ற வகையில் சீனாவை குறிப்பிட்டார் அவர். உலகத்தின் பல்வேறு நாடுகளின் இடங்களை கைப்பற்றுவது போல், எல்லைகளை விரிவுப்படுத்தும் வகையில் நம்முடைய நாட்டில் ஆக்கிரமிப்பு செய்கிறது. ஆனால் இந்தியாவின் பதில் தாக்குதல் அவர்களை திணறடித்துவிட்டது. நம்முடைய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்தியாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தற்போது சீனாவை விமர்சித்து வருகிறது என்று அவர் கூறினார்.

To read this article in English 

சீனா நினைத்தும் பார்க்காத நிலையை இது உருவாக்கிவிட்டது. இப்போது அந்நாடு எந்த வகையில் செயல்படும் என்பது தெரியவில்லை. அதனால் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொருளாதர சக்தி, உலகாளாவிய உறவுகளை நாம் மேம்படுத்த வேண்டும். அண்டை நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு நிகராக நாம் அதிகாரத்தில் உயர வேண்டும். பிரம்மதேசம், இலங்கை, வங்கம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் நம்மை போன்றே ஆயிர கணக்கான வருடங்களிருக்கின்றன. அந்நாடுகளுடன் நாம் இணைய வேண்டும். வேறுபாடுகளும் சச்சரவுகளும் இருக்கும். ஆனால் விரைவில் நாம் அதனை களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லடாக்கில் ஏற்பட்ட இந்நிகழ்வின் விளைவால் சீனா, இந்திய ராணுவ வீரர்களின் தேசப்பற்று மற்றும் வீரம், நம் தலைவர்களின் சுயமரியாதை கொள்கைகள், மற்றும் நம் நாட்டு மக்களின் ஒற்றுமையை ஒன்றுகூட நேரில் கண்டது. இந்த சக்தியை நாம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். எதிர்கட்சிகள் சமூக மோதல்களை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தி, பலவீனமாக்க முயல்கிறது. இது போன்ற சக்திகள் உலகெங்கும் உள்ளனர். அவர்களின் ஏஜெண்ட்டுகள் இந்தியாவிலும் இருக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரிவுகளாக மாற்றி மோதல்களை உருவாக்குவார்கள் என்று அவர் கூறினார்.

ஒரு சம்பவம் நடந்தால்… அது நடக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு சம்பவம் நடந்தால், நிர்வாகம் உடனடியாக குற்றவாளிகளைப் பிடித்து அவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும். ஆனால் ஒரு சமூகமாக வினைபுரியும் போது, ​​அது தேசிய ஒருங்கிணைப்பை பாதிக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் (எதிர்வினைகள்) அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பின் எல்லைக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ”

ஆனால் இந்தியாவில் அரசியல் சாசனத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சில நேரங்களில் வன்முறையில் இறங்குகின்றனர். அவர்கள் நாட்டினை பிரிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்புகின்ற்றனர். அவர்கள் இந்நாட்டினை காப்பவர்கள் என்று காட்டிக் கொண்டு நாட்டினை பிளவுபடுத்த முயலுகின்றனர் என்று கூறினார்.

மோகன் ”இந்த நபர்களை”, நாட்டிற்கு அரசியல் சாசனத்தை அம்பேத்கார் வழங்கும் போது, அராஜகத்தின் இலக்கணத்தை விளக்குகையில் குறிப்பிட்ட மக்களுடன் ஒப்பிட்டார். நாம் அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் யோசனை குறித்து தவறான கருத்துக்களை பரப்பியதற்காக “இந்த மக்கள்” என்றும் பகவத் குற்றம் சாட்டினார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பியதும் “இந்த மக்கள்” தான் என்றும் பகவத் குற்றம் சாட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்து என்றே அழைக்கின்றோம். இதனை வழிபாடு மற்றும் உணவு நடைமுறைகளுக்குள் வரையறுக்கவில்லை. ஆன்மீக அடிப்படையிலான, மதிப்புகளுடன் கூடிய மரபுகளின் தொடர்ச்சியானது தான் நம் நாட்டின் அடையாளம். இந்த தேசத்தையும் அதன் காலமற்ற கலாச்சார விழுமியங்களையும் தங்களது சொந்தமாகக் கருதி, அதன் பண்டைய பாரம்பரியத்தையும் மதிக்கிறவர்கள் அனைவரும் இந்துக்கள். ”

இந்த கருத்தின் மீதான தாக்குதல் நம்மை பலப்படுத்தும் சரத்தினை தளர்த்துகிறது. நம்மை பிரிக்க நினைக்கும் மக்கள், இந்து என்ற வார்த்தையை தான் முதலில் விமர்சிக்கின்றனர். நாம் இந்துக்கள் இல்லை என்பதை அவர்கள் பரப்ப முயல்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை பிளவுப்படுத்த பயன்படுத்துகின்றனர். வேறுபாடுகளை அவர்கள் தனித்தன்மை என்று அழைக்கின்றனர். இதனை அவர்கள் பிரிவினைவாதத்திற்கு ஒரு ஆதாரமாக காண்கின்றனர் என்று அவர் கூறினார்.

இந்துக்கள் அல்லாதவர்களைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடும் பகவத், “நாங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்தால் அல்லது உங்களை இந்துக்கள் என்று அழைத்தால், உங்களுடையது மட்டுமே உயர்ந்த நம்பிக்கை என்ற அடிப்படைவாத (“ கட்டர்பந்தி ”) நம்பிக்கையைத் தவிர வேறு எதையும் நீங்கள் இழக்க மாட்டீர்கள். நீங்கள் வேறுபட்டவர் என்ற பிரிவினைவாதத்தின் அடிப்படைவாதத்தையும் உணர்வையும் மட்டுமே நீங்கள் விட்டுவிட வேண்டும். துக்டே-துக்டே கும்பலைப் போல நாட்டை பிளவுபடுத்த விரும்பும் நபர்களிடம் இருந்து மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்தியர்களாக உணர்ச்சி ரீதியான ஒருங்கிணைப்பை நாங்கள் அறிவுறுத்த வேண்டும். ”

வலிமை மற்றும் செழிப்பினை அடைய சுதேசத்தினை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். சுதேசி என்பது நம் கைகளால் நாட்டிற்குள் எஞ்சியுள்ள பொருளாதார ஆதாயங்களை கொண்டு உற்பத்தி செய்வது மட்டுமல்ல. அத்தகைய உற்பத்திக்கு பின்னால் உள்ள சிந்தனை நம்முடையதாக இருக்க வேண்டும் (ஸ்வா-ஆதரித்). பாரதிய மஸ்தூர் சங்கம் அமைப்பின் நிறுவனர் மறைந்த தட்டோபண்ட் தெங்கடி, சுதேசியை, "சமத்துவத்தின் அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பின் நிலைமை" என்று கூறியதை மேற்கோள் காட்டினார். நாம் வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளோம். புதிய தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கிறோம். வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் திருப்தி அளிக்கின்ற வகையில் இருக்கிறது என்று கூறிய அவர், இனி விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் இந்நாட்டில் தங்களின் விவசாய பொருட்களை விற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

பண்டைய விவசாய முறைகளை ஊக்குவித்தல் குறித்து பேசிய போது, இயற்கை விவசாயத்தை, நவீன கால வேளாண் முறைகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறினார். "நம் விவசாயக் கொள்கையை வடிவமைக்கும்போது, ​​நம் விவசாயி அவர்களது விதை வங்கிகளைக் கட்டுப்படுத்தவும், உரம், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தானாகவே உருவாக்கவும் அல்லது அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வாங்கவும் அதிகாரம் அளிக்க வேண்டும். அவர் தனது தயாரிப்புகளை சேமித்து செயலாக்கும் கலையைப் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் அத்தகைய வசதிகளை எளிதில் அணுக வழி வகை செய்ய வேண்டும், ”என்று பகவத் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கொள்கைகள், விவசாயியை ஆராய்ச்சியின் முடிவுகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தன்னுடைய வேளாண் பொருட்களை இலாபத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட கண்டுபிடிப்புகளின் விளக்கங்கள், அல்லது கார்ப்பரேட் துறையின் நிதியுதவி ஆராய்ச்சிகள் அல்லது கீழ் சந்தை சக்திகள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏதுமின்றி விற்பனை செய்ய வழி வகை செய்ய வேண்டும். அப்போதுதான் அத்தகைய கொள்கை பாரதிய பார்வையுடன் ஒத்துப்போகும், உண்மையான சுதேசி விவசாய கொள்கையாக இருக்கும். ”

நரேந்திர மோடி அறிவித்த புதிய கல்விக் கொள்கையை வரவேற்றார் மோகன். விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் உரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முயற்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு முழுமையான செயல்முறையும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து முடிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நம் சமூகத்தை அரசுடன் ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பு மிகவும் வெளிப்படையாகவும், சென்சிட்டிவாகவும் இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று குறித்து பேசும் போது. நாம் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். நாம் வாழாமல் நின்றுவிட இயலாது. கொரோனா வைரஸ் பரவுகிறது. ஆனாலும் அதனால் ஏற்படும் மரணங்கள் குறைவு தான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாம் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல், மற்றும் குடும்ப முக்கியத்துவங்கள் குறித்து நாம் கற்றுக் கொள்ள துவங்கினோம்.

இந்த கொரோனா நம்மிடையே வேலையில்லா திண்டாட்டம் குறித்த சவால்களுக்கு வழி வகுத்துள்ளது. நிறைய நபர்கள் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் தற்போது நகரங்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது அந்த வேலை அங்கு இருக்காது. வேலை வாய்ப்புகளை வெவ்வேறு இடங்களில் உருவாக்குவது தான் தற்போது இருக்கும் சவால்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment