Advertisment

பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து - ஐ.சி.எம்.ஆர்

கோவிட் 19 டாஸ்க் ஃபோர்ஸில் பணியாற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் ரஜினி காந்த் இதனை உறுதி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து - ஐ.சி.எம்.ஆர்

India-made COVID-19 vaccine could be launched as early as February, says ICMR scientist :  உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. தனியார் மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் இந்த பெருந்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் மகத்தான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Advertisment

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் என்ற மருந்தினை இந்தியாவில் தயாரிக்க துவங்கியுள்ளது. இந்த மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனை இந்த மாதம் மிகப் பெரிய அளவில் நடைபெற உள்ளது. இதுவரை நடத்திய பரிசோதனைகளில் பாதுகாப்பாகவும், செயல் திறன் மிக்கதாகவும் இருக்கிறதாக தெரிய வந்துள்ளது.

to read this article in English

கோவிட் 19 டாஸ்க் ஃபோர்ஸில் பணியாற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் ரஜினி காந்த் இதனை உறுதி செய்துள்ளார். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். பாரத் பயோடெக் இதுவரை இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. இன்று காலை நிலவரபப்டி இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8.36 மில்லியனாகும். 50, 201 நபர்கள் நேற்று மற்றும் கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ளது.

மிருகங்களின் மீதான சோதனை, முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் சிறப்பாகவே இருக்கிறது. இருப்பினும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வரும் வரை நாம் எதையும் உறுதியாக தெரிவிக்க இயலாது என்று ரஜினி காந்த் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment