மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், எக்சிட் போல் கணிப்புகளை ம உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய முக்கியமான மாநிலங்களில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி அதிக இடங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்ற உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கருத்துக் கணிப்புகளை மீறி வெற்றியை பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி 36 இடங்களிலும், பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியும், ரேபரேலியில் ராகுல் காந்தியும் முன்னிலை வகிக்கின்றனர். மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஸ்மிருதி இரானி, காந்தி குடும்பத்தின் விசுவாசியான காங்கிரஸின் கிஷோரி லால் சர்மாவை விட பின்தங்கியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றியை அளித்தன. 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 62 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் 2 இடங்களையும் கைப்பற்றியது. சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் மட்டுமே கைப்பற்றியது.
மேற்கு வங்கத்தில், ஆரம்ப பின்னடைவுக்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது, பாஜக 9 இடங்களுடன் பின்தங்கியுள்ளது. தேர்தல் ஆணைய புள்ளிவிபரங்களின்படி காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிராவில், இது மீண்டும் ஒரு நெருக்கமான போர், தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலா 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) 8 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
ஹரியானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் தலா 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிகிறது. பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 3 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ள நிலையில், பஞ்சாபில் ஏழு இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆங்கிலத்தில் வாசிக்க : INDIA makes crucial gains in UP, West Bengal, Maharashtra
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“