Advertisment

இந்தியாவின் புதிய அதிகாரபூர்வ வரைபடம்: மொத்தம் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்

States of India: புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28, யூனியன் பிரதேசங்கள் 9 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india official map, indian states and capitals, number of states in india, இந்தியா வரைபடம், இந்தியா மேப்

india official map, indian states and capitals, number of states in india, இந்தியா வரைபடம், இந்தியா மேப்

India Political Map: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அதிகாரபூர்வமான இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேற்படி மாற்றத்திற்கு பிறகு இந்தியாவில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன.

Advertisment

india official map, indian states and capitals, number of states in india, இந்தியா வரைபடம், இந்தியா மேப் New Map Of India

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு மாற்றியமைக்கப்பட்டது. மேற்படி அறிவிப்பு அமுலுக்கு வந்த இரு நாட்களில், அதாவது கடந்த சனிக்கிழமை (நேற்று) மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் அதிகாரபூர்வ புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது.

india official map, indian states and capitals, number of states in india, இந்தியா வரைபடம், இந்தியா மேப் Ladakh UT Map

கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீரின் லெப்டினண்ட் கவர்னராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி கிரிஸ் சந்திர மர்முவும், திரிபுரா கேடர் ஓய்வுபெற்ற அதிகாரி ராதாகிருஷ்ண மாத்தூர், யூனியன் பிரதேசமான லடாக்கின் லெப்டினண்ட் கவர்னராகவும் பொறுப்பேற்றது நினைவு கூறத்தக்கது. புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28, யூனியன் பிரதேசங்கள் 9 ஆகும்.

யூனியன் பிரதேசங்களின் புதிய பட்டியல் வருமாறு: full list of UTs in India:

1. அந்தமான் & நிக்கோபார் (Andaman and Nicobar)

2. சண்டிகார் (Chandigarh)

3. டாமன் &டையு (Daman and Diu)

4. தாதர் & நாகர் ஹாவேலி (Dadar and Nagar Haveli)

5. டெல்லி (Delhi)

6. ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir)

7. லடாக் (Ladakh)

8. லட்சத்தீவு (Lakshadweep)

9. புதுச்சேரி (Puducherry)

இந்திய மாநிலங்களின் முழுப் பட்டியல் வருமாறு: Complete list of Indian states

1. ஆந்திரப் பிரதேசம்- Andhra Pradesh

2. அருணாசலப் பிரதேசம்- Arunachal Pradesh

3. அஸ்ஸாம்- Assam

4. பீகார்- Bihar

5. சட்டிஸ்கர்- Chhattisgarh

6. கோவா- Goa

7. குஜராத்- Gujarat

8. ஹரியானா- Haryana

9. ஹிமாசல பிரதேசம்- Himachal Pradesh

10. ஜார்கண்ட்- Jharkhand

11. கர்நாடகா- Karnataka

12. கேரளா- Kerala

13. மத்திய பிரதேசம்- Madhya Pradesh

14. மகாராஷ்டிரா- Maharashtra

15. மணிப்பூர்- Manipur

16. மேகாலயா- Meghalaya

17. மிசோராம்- Mizoram

18. நாகலாந்து- Nagaland

19. ஒடிஸா- Odisha

20. பஞ்சாப்- Punjab

21. ராஜஸ்தாந் Rajasthan

22. சிக்கிம்- Sikkim

23. தமிழ்நாடு- Tamil Nadu

24. தெலங்கானா- Telangana

25. திரிபுரா- Tripura

26. உத்தரப்பிரதேசம்- Uttar Pradesh

27. உத்தரகாண்ட்- Uttarakhand

28. மேற்கு வங்கம்- West Bengal

இவைதான் இந்தியாவின் இப்போதைய புதிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.

 

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment