Advertisment

'பாரத்' பெயர் மாற்றம் சர்ச்சை: 'வெறும் வதந்தியே'- மத்திய அமைச்சர் பேச்சு

'இந்தியா' 'பாரத்' என பெயர் மாற்றுப்பட உள்ளது என்பது போல் வெளிக்கியுள்ள தகவல்கள் "வதந்திகள்" என்று கூறியுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அருணாக் தாக்கூர் அந்த கருத்தை நிராகரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
A picture of the G20 dinner invite, President Droupadi Murmu and the Rashtrapati Bhavan (Express Photo)

அரசியலமைப்பின் வரைவு பிரிவு 1 -இன் படி, "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று கூறுகிறது. செப்டம்பர் 18, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

India news in Tamil: வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது, இந்த நிலையில், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு 'பாரத்' குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அந்த அழைப்பிதழில் உள்ள வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இதேபோல், 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்காக பிரதமர் இந்தோனேசியாவிற்குச் சென்றது குறித்த அரசின் கையேட்டில் நரேந்திர மோடியை "பாரதத்தின் பிரதமர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க.வை கடுமையாக  தாக்கிப் பேசி வருகின்றனர். 

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'இந்தியா' 'பாரத்' என்று பெயர் மாற்றுப்பட உள்ளது என்பது போல் வெளிக்கியுள்ள தகவல்கள் "வதந்திகள்" என்று கூறியுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அருணாக் தாக்கூர் அந்த கருத்தை நிராகரித்துள்ளார் 

இதுகுறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "இவை வெறும் வதந்திகள் மட்டுமே. இது பாரதம் என்ற சொல்லை எதிர்க்கும் எவரும் மனப்போக்கை தெளிவாகக் காட்டுகிறார்கள்." என்று கூறினார். 

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் "பாரத்" என குறிப்பிட்டுள்ளதை கேள்வி எழுப்பியது போது அமைச்சர் அருணாக் தாக்கூர், "அவர் பாரதத்தின் குடியரசுத் தலைவர் தான் அல்லாவா? அதில் என்ன தவறு?president of bharat, g20 dinner invite

நான் பாரத் அரசில் அமைச்சராக இருக்கிறேன். இதில் புதிதாக எதுவும் இல்லை. ஜி20-2023 (பிராண்டிங், லோகோ) பாரத் மற்றும் இந்தியா இரண்டையும் எழுதுவோம். அப்படியென்றால் பாரதம் என்ற பெயருக்கு ஏன் இந்த எதிர்ப்பு? பாரதத்தில் யாருக்காவது ஏன் ஆட்சேபனை உள்ளதா? இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது, அவர்களின் இதயத்தில் அவர்கள் இந்தியா அல்லது பாரதத்திற்கு எதிரானவர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. வெளிநாடு செல்லும்போது பாரதத்தை விமர்சிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் இருக்கும்போது, ​​பாரதத்தின் பெயரைச் சொல்வதில் அவர்களுக்கு ஆட்சேபனை உள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க:- President of Bharat, Prime Minister of Bharat now official, Govt says India name change talk a rumour

அதை யார் கைவிட்டது? (இந்தியா என்ற வார்த்தை)... யாரும் அதை கைவிடவில்லை. நீங்கள் ஜி20 பிராண்டிங்கைப் பார்த்தால் கூட... அது இந்தியா 2023 மற்றும் பாரத். பாரதம் அப்படி எழுதப்பட்டதை ஏன் யாராவது யூகிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும்? கடந்த ஒரு வருடமாக இந்த பிராண்டிங் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

அரசியலமைப்பின் வரைவு பிரிவு 1 -இன் படி, "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று கூறுகிறது.  செப்டம்பர் 18, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பாரதத்தின் குடியரசுத் தலைவர் " என்ற பெயரில் இரவு விருந்து அழைப்பிதழை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். பா.ஜ.க தலைவரும் அசாம் முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சமூக ஊடகப் பதிவில், “பாரத குடியரசு - நமது நாகரிகம் அமிர்த காலை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும்  உள்ளது” என்று பதிவிட்டு இருந்தார். இதேபோல் பா.ஜ.கவின்  செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா x தள பதிவில் "பாரதத்தின் பிரதமர்" என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment