இந்தியா கூட்டணி எதிரொலி, நாட்டுக்கு ’பாரதம்’ பெயர் சூட்டும் பாஜக- எதிர்க் கட்சிகள் கடும் தாக்கு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாட்டின் பெயரை மாற்ற” மத்திய அரசை திடீரென தூண்டியது எது என்று கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாட்டின் பெயரை மாற்ற” மத்திய அரசை திடீரென தூண்டியது எது என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
India name row

India Vs Bharat

ஜி 20 மாநாடு முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் இரவு உணவிற்கு விடுத்த அழைப்பதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலால, ’பாரத்ததின் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டின.

எனவே அந்தச் செய்தி உண்மைதான். ராஷ்டிரபதி பவன் செப்டம்பர் 9 ஆம் தேதி G20 விருந்துக்கு அழைப்பை அனுப்பியுள்ளது, ஆனால்'இந்திய ஜனாதிபதி' என்ற பெயருக்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில்

அரசியலமைப்பின் பிரிவு 1 பின்வருமாறு சொல்கிறது- பாரதம், அதுதான் இந்தியா, இது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும். ஆனால் இப்போது இந்த யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ”நமது நாடு 140 கோடி மக்களைக் கொண்டது. இந்திய கூட்டணியின் பெயரை பாரத்கூட்டணி என்று மாற்றினால், அவர்கள் (பாஜக) பாரத்என்ற பெயரை மாற்றுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம்  எம்.பி. மனோஜ் ஜா, ANI செய்தி நிறுவனத்திடம், “எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டு சில வாரங்களே ஆகிறது, இப்போது பாஜக 'இந்திய குடியரசு' என்பதற்குப் பதிலாக பாரதத்தின் குடியரசுஎன்று அழைப்பு அனுப்பத் தொடங்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1, ‘இந்தியா அது பாரதம்என்று கூறுகிறது. எங்களிடமிருந்தும், பாரதத்திலிருந்தும் இந்தியாவை உங்களால் பறிக்க முடியாது..." என்றார்.

இதற்கிடையில், "பாரதம்" என்ற வார்த்தையால் எதிர்க்கட்சிகள் அசௌகரியம் அடைந்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறினர்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் ANI இடம் கூறும்போது, ​​“பாரதம் என்று சொல்வதிலும் எழுதுவதிலும் ஏன் சிக்கல் இருக்கிறது? நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள் ஜெய்ராம் ரமேஷ்?

நமது தேசம் பழங்காலத்திலிருந்தே பாரதம் என்று அழைக்கப்பட்டு, நமது அரசியலமைப்பில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. காரணமே இல்லாமல் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்கின்றனர்,

பாரத்' என்ற வார்த்தை புதியதல்ல, இது பழங்காலத்திலிருந்தே அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவில் உள்ளது”, என்றார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1ல் இடம் பெற்றுள்ள பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? நம் நாடு பாரதம்’, இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். காங்கிரஸுக்கு எல்லாவற்றிலும் சிக்கல் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்

இப்போது 28 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி, ஜூலை மாதம் இந்தியா என்ற பெயரை ஏற்றுக்கொண்ட பிறகு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,எங்கள் நாகரிக மோதல் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டுள்ளது’ என்றார்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நம் முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக பாடுபடுவோம். பாரதத்திற்காக பா.ஜ.க.” என்று அவர் ட்வீட் செய்தார்.

அடுத்த நாள், "பாரத்" என்ற சொல்லைக் கொண்ட ஒரு கோஷத்தை இறுதி செய்யும் பணியில் கூட்டணி ஈடுபட்டது மற்றும் "ஜூடேக பாரத், ஜூடேக இந்தியா (பாரத் ஒன்றுபடும், இந்தியா வெல்லும்)" என்று முடிவு செய்தது.

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நாட்டின் பெயரை மாற்றமத்திய அரசை திடீரென தூண்டியது எது என்று கேள்வி எழுப்பினார். இன்று, அவர்கள் இந்தியாவின் பெயரை மாற்றியுள்ளனர்.

G20 உச்சி மாநாட்டின் இரவு விருந்துக்கான அழைப்பிதழில், 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது...ஆங்கிலத்தில், 'இந்தியா' என்றும், 'இந்திய அரசியலமைப்பு' என்றும், இந்தியில், 'பாரத் கா சம்விதன்' என்றும் கூறுகிறோம்.

நாமெல்லாம் பாரத்என்கிறோம், இதில் என்ன புதுமை? ஆனால், ‘இந்தியாஎன்ற பெயர் உலகுக்குத் தெரியும்... திடீரென்று என்ன நடந்தது, அவர்கள் ஏன் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்?” என்று மம்தா கேள்வி எழுப்பினார்.

மெகபூபா முப்தி தனது X தளத்தில் ஒரு பதிவில், "வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படைக் கொள்கையின் மீதான பாஜக வெறுப்பு ஒரு புதிய தாழ்வைத் தொட்டுள்ளது.

இந்தியாவின் பல பெயர்களை ஹிந்துஸ்தான், இந்தியா என்று குறைத்து இப்போது பாரதம் ஆகிவிட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் முதன்முறையாக, முரட்டுத்தனமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு கட்சி, முழு நாட்டையும் கேவலமாக நடத்துகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சசி தரூர், “பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட கணக்கிட முடியாத பிராண்ட் மதிப்பைக் கொண்ட” ‘இந்தியாவைமுழுமையாக கைவிடும் அளவுக்கு அரசாங்கம் முட்டாள்தனமாக இருக்காது என்று நம்புவதாகக் கூறினார்.

"இந்தியாவை "பாரத்" என்று அழைப்பதில் அரசியலமைப்பு ஆட்சேபனை இல்லை, இது நாட்டின் இரண்டு அதிகாரப்பூர்வ பெயர்களில் ஒன்றாகும். இருப்பினும் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட கணக்கிட முடியாத பிராண்ட் மதிப்பைக் கொண்டுள்ள "இந்தியா" வை முற்றிலும் கைவிடும் அளவுக்கு அரசாங்கம் முட்டாள்தனமாக இருக்காது என்று நம்புகிறேன். என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: