Advertisment

ராஜதந்திர நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியா - நேபாளம்; எல்லையை விரிவாக்குவது நியாமனதல்ல - புது டெல்லி

நேபாளம் புதிய வரைபடத்திற்கு சட்ட அதிகாரம் வழங்குவதற்காக, நேபாள அரசியலமைப்பு திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றியது. இந்நிகழ்வையடுத்து இந்தியாவும் நேபாளமும் சனிக்கிழமை ஒரு ராஜதந்திர நெருக்கடியை சந்தித்துவருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india nepal map, india nepal border, nepal political map, india - Nepal border issues, இந்தியா நேபாளம் எல்லைப் பிரச்னை, இந்தியா - நேபாளம் ராஜதந்திர நெருக்கடி, India - Nepal diplomatic crisis, nepal new map, lipulekh, kalapani, limpiyadhura, nepal parliament session, Tamil indian express

india nepal map, india nepal border, nepal political map, india - Nepal border issues, இந்தியா நேபாளம் எல்லைப் பிரச்னை, இந்தியா - நேபாளம் ராஜதந்திர நெருக்கடி, India - Nepal diplomatic crisis, nepal new map, lipulekh, kalapani, limpiyadhura, nepal parliament session, Tamil indian express

நேபாளம் புதிய வரைபடத்திற்கு சட்ட அதிகாரம் வழங்குவதற்காக, நேபாள அரசியலமைப்பு திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றியது. இந்நிகழ்வையடுத்து இந்தியாவும் நேபாளமும் சனிக்கிழமை ஒரு ராஜதந்திர நெருக்கடியை சந்தித்துவருகின்றன.

Advertisment

காத்மாண்டுவின் இந்த முடிவுக்கு பதிலளித்துள்ள புது டெல்லி, இந்த உரிமைகோரல்களின் செயற்கையான விரிவாக்கம் நியாயமானதல்ல என்றும், இது நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இருதரப்பு புரிதலை மீறுகிறத என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி தலைமையிலான உறுதியான அகண்ட நேபாள அரசாங்கத்தை கையாள்வதில் அந்நாட்டு அரசாங்கம் இப்போது கடுமையான தேர்வை எதிர்கொள்கிறது.

இந்தியா - நேபாளம் இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களுக்கிடையில் சந்திப்பு நடத்த்துவதற்கு நேபாளம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை இந்திய அரசு பதிலளிக்கவில்லை.

ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலிக்கும் இடையிலான கடைசி தொலைபேசி உரையாடலில் தற்போது நிலவும் கோவிட்-19 நெருக்கடி குறித்தும் தற்போதைய பிரச்னைகள் வரை அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ​​தற்போதைய நெருக்கடி இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்புகளில் முழுமையான முறிவை பிரதிபலிக்கிறது.

நேபாள அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நேபாள பிரதிநிதிகள் சபையால் நேபாளத்தின் ராணுவ விதிகளை திருத்தியமைத்தது குறித்து வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர், “நேபாளத்தின் பிரதிநிதிகள் சபை இந்திய பிராந்தியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக நேபாளத்தின் வரைபடத்தை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். எல்லைகளின் செயற்கை விரிவாக்கம் வரலாற்று உண்மை அல்லது சான்றுகளின் அடிப்படையில் அமைந்ததல்ல மேலும் இது நியாயமானதல்ல. நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் எங்கள் தற்போதைய புரிதலை மீறுவதாகும்” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இந்த அறிக்கை இந்தியாவின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அது தற்போது எந்த உரையாடலையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒன்றை வைத்திருப்பதற்கான வாய்ப்பைத் தடுக்காது.

புதுடெல்லி தேர்வுகளை உருவாக்க உள்ளது. இது காத்மாண்டுடனான உரையாடலுக்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளலாம். மேலும், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யலாம்.

ஆனால் நேபாள அரசாங்கத்தால் இயற்றப்பட்ட புதிய வரைபடத்தை எதிர்கொள்ளும்போது, ​​காத்மாண்டு எல்லைக் கல்லில் சிவப்பு கோடுகளை பொறித்திருப்பதால், புது டெல்லி ஒரு கடினமான நிலையைக் கண்டுள்ளது. இது டெல்லியை தனது சிவப்பு எல்லைக் கோட்டை வரையும்படி கட்டாயப்படுத்தலாம். நேபாளத்தை எல்லைப் பிரச்சினையில் திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டு பின்னர் பேச்சுவார்த்தைக்கு முன்வரலாம்.

ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான பாதையை இந்திய அரசு தேர்வு செய்யாவிட்டால், நேபாளத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், அது தண்டனை நடவடிக்கைகளையும் தேர்வு செய்யலாம். இது ஆபத்து நிறைந்தது என்பதோடு நேபாள மக்களை அந்நியப்படுத்தக் கூடும்.

இந்திய அரசு முற்றுகையின்போது, ​​2015ம் ஆண்டில் அது போல ஒரு தந்திரத்தை முயற்சித்தது. மேலும் இந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அதன் விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்கும்.

அரசாங்கத்திற்கு வெளியே இது நேபாள அரசியல் மற்றும் சிவில் சமுதாயத்துடன் அதன் தொடர்பு மற்றும் ஈடுபாட்டின் வழிகளைத் திறக்கக்கூடும். மேலும் அதன் பார்வையைத் தெரிவிக்க முயற்சி செய்யலாம். ஆனால் வரைபடப் பிரச்சினையில் இரு கட்சி ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, அது வலுவான தேசியவாத தொனிகளை மேற்கொண்டுள்ளதால், நேபாளத்தின் அரசியல் பரப்பை டெல்லியின் சமூகப் பார்வையில் சிலவற்றைக் காணலாம்.

காத்மாண்டு இரு வெளியுறவு செயலாளர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை நடத்த கோரிக்கை விடுத்ததை டெல்லி மறுத்துள்ள நேரத்தில், இந்த விவகாரம் வந்துள்ளது. இது 2014-ம் ஆண்டு இரு தரப்பிலிருந்தும் பிரதமர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மோசமாக பாதிக்கும் என்று அச்சுறுத்திய எல்லை தகராறு பிரச்சினையில் இந்தியாவுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்த நேபாளம் தயாராக இருந்தது. காத்மாண்டு கடந்த ஒரு மாதமாக புது டெல்லிக்கு - ஒரு ராஜதந்திர குறிப்பு மூலம் - இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் நேரில் அல்லது மெய்நிகர் மூலம் சந்திக்க திறந்திருப்பதாக தெரிவித்தது.

ஆனால், புது டெல்லி, இரு நாடுகளும் கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக கையாண்ட பின்னர் இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதாக கூறியுள்ளது.

“கோவிட்-19 அவசரகால சவாலை இரு சமூகங்களும் அரசாங்கங்களும் வெற்றிகரமாக கையாண்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் தேதிகள் முடிவானவுடன் வெளியுறவு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தைக்கு திட்டமிடும் பணியில் இரு தரப்பினரும் உள்ளனர்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மே 9-ம் தேதி தெரிவித்துள்ளது.

வெளியுறவு செயலாளர் மட்ட பேச்சுவார்த்தை யோசனை 1997 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஐ கே குஜராத் வருகையின் போது தொடங்கியது. மீண்டும் 2000 ஆம் ஆண்டில் ஏ.பி. வாஜ்பாய் - பி பி கொய்ராலா பேச்சுவார்த்தையின் போது தொடங்கியது. சமீபத்தில் நேபாளத்தால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்தது. ஆனால், இரண்டு முறை நடத்த முடியவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Nepal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment