காளி நதியை எல்லையாக வரையறுத்த இந்தியா: ஆதித்யநாத் கருத்துக்கு நேபாளம் எதிர்ப்பு
India nepal border : அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாளம், விளைவுகளை சிந்தித்துப் பார்த்து செய்ய வேண்டும். திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்திற்கு பிரதமர் ஒலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
India, nepal, territory, Yogi Adityanath, k p sharma oli, nepal pm, india nepal border, river boundary, yogi adityanath, indian express news
Yubaraj Ghimire
Advertisment
இந்திய - நேபாள எல்லையாக இல்லாத காளி நதியை, இந்தியா வரையறுத்துள்ளதாகவும், அங்கு தனது ராணுவ படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக, நேபாள பிரதமர் கே பி சர்மா ஒலி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள நாட்டின் பகுதிகளான காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளில், இந்தியா ஆக்கிரமிப்புகள் மேற்கொண்டுள்ளதாகவும், அப்பகுதிகளை இந்தியா சொந்தம் கொண்டாடி அந்நாட்டு வரைபடத்தில் இணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாளம், விளைவுகளை சிந்தித்துப் பார்த்து செய்ய வேண்டும். திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்திற்கு பிரதமர் ஒலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டு நாடாளுமன்றத்தில் வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் ஒலி பேசியதாவது, இந்தியா, இரு நாடுகளின் எல்லையாக இல்லாத காளி நதியை நிர்ணயித்து அங்கு தனது படைகளை நிறுத்தியுள்ளது. நேபாளத்தின் எல்லைப்பகுதி மீட்கப்படும். இந்த விவகாரத்தில், அனைத்துகட்சிகளும், அரசிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நேபாள அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்திய பகுதிகளான லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை தங்கள் நாட்டில் இணைத்துள்ளது. மேலும் லிபுலேக் வரை போடப்பட்டுள்ள 80 கி.மீ சாலையை திறந்ததற்கு இந்தியாவிடம் கடந்த மாதம் காத்மாண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிய வரைபடத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவை பெறுவதற்காக அரசியலமைப்பு திருத்தத்தை செவ்வாயன்று நேபாள பாராளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் நேபாளம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் நியாயமானவை அல்ல. இந்திய அரசின் தலைமை, அவர் பொறுப்பேற்காத பிரச்சினைகள் குறித்து பேச வேண்டாம் என்று அவரிடம் சொல்ல வேண்டும். நேபாளத்தை அச்சுறுத்தும் அவரது கருத்துக்கள் கண்டிக்கப்படும் என்றும் அவரிடம் கூறப்பட வேண்டும் என்று பிரதமர் ஒலி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil