கோவாக்சின் & கோவிஷீல்டு கலவை, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது; ஐசிஎம்ஆர்

Mixing Covaxin and Covishiled elicits better immunogenicity, says ICMR study: கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் கலவை, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது; ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), ஞாயிற்றுக்கிழமை, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் கலவை அளவுகள் பற்றிய முதல் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது.

அடினோவைரஸ் வெக்டர் பிளாட்ஃபார்ம் தடுப்பூசிக்கு பின்னர் செயலிழந்த முழு வைரஸ் தடுப்பூசியின் கலவையானது, பாதுகாப்பானது மற்றும் 2 டோஸ் ஹோமோலோகஸ் கலவையை விட சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 39,070 புதிய கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்து, ஒட்டுமொத்த எண்ணிக்கையை 3.19 கோடிக்கு மேல் (3,19,34,455) அதிகரித்துள்ளது. 491 தினசரி இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 4,27,862 ஆக உயர்ந்தது, என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்புகள் எண்ணிக்கையில் மீண்டும் 20,000-ஐ மீறுவதில் கேரளா முதலிடம் வகிக்கிறது.

இந்த காலகட்டத்தில் செயலில் உள்ள பாதிப்புகள் 4,06,822 ஆக குறைந்துள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 1.29 சதவீதமாக மேம்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையில் 5,331 குறைந்துள்ளது.

சனிக்கிழமை 17,22,221 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன, இதுவரை செய்யப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 48,00,39,185 ஆக உள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

இந்தியா, சனிக்கிழமையன்று, அமெரிக்க மருந்தியல் நிறுவனமான ஜான்சன் & ஜான்சனுக்கு அதன் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியது. இந்த அனுமதி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசியை வணிகரீதியான பயன்பாட்டிற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்த J & J இன் இந்திய துணை நிறுவனத்திற்கு வழி வகுத்தது.

ஜே & ஜே துணை நிறுவனமான ஜான்சன் பார்மசூட்டிகல்ஸ் உருவாக்கிய ஒற்றை-ஷாட் தடுப்பூசி, 3 வது கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான நோய்களைத் தடுப்பதில் 85 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அவசர கால ஒப்புதல் வழியின் மூலம் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி இதுவாகும். ஒப்புதலுக்குப் பிறகு, தடுப்பூசியின் பாதுகாப்பை நிறுவுவதற்கு ஜே & ஜே, மாடர்னாவைப் போல, இந்தியாவில் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தத் தேவையில்லை.

“இந்தியா தடுப்பூசி கூடையை விரிவுபடுத்துகிறது! ஜான்சன் மற்றும் ஜான்சனின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் 5 EUA தடுப்பூசிகள் உள்ளன. இது #COVID19 க்கு எதிரான நமது தேசத்தின் கூட்டுப் போராட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் “என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India new covid deaths cases third wave vaccine

Next Story
2000 பேர் கொண்ட காந்தரா கிராமம்; எல்லாரிடமும் இருக்கிறது நீரஜ் பற்றிய கதை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com