Covid-19 Second wave in Maharashtra Tamil news: இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் தொற்று பதிப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நாட்டில் முதன் முதலில் பரவிய தொற்றில், முதல் 2 மாதங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,06,453 - ஆக இருந்தது. தொற்று பரவ தொடங்கிய ஓரிரு வாரங்கள் கழித்தே, தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. ஜனவரி 11ம் தேதி முதல் மார்ச் 11 ம் தேதி வரையுள்ள இடைப்பட்ட மாதங்களில், நாடு முழுவதும் மொத்தம் 6,979 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்கள்.
தற்போது தொற்று அதிகமாக காணப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில், தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. மேலும் 20 சதவீத தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாகவும் உள்ளது.
மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த தொற்று பதிப்பட்டவர்களின் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) சுமார் 2.38 சதவீதமாக உள்ளது. இது இந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவுவை (1.2 சதவீதம்) கொண்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரியில் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியபோது, சி.எஃப்.ஆர் இன்னும் குறைவாக (1 சதவீதம்) உள்ளது.
"புதிய நோய்த்தொற்றுகள் மிகவும் லேசான அறிகுறிகளை உருவாக்குகின்றன என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. இதுதான் இந்த இரண்டாவது அலை நோய்களை முதலில் இருந்து வேறுபடுத்துகிறது ”என்று மகாராஷ்டிராவின் கோவிட் -19 கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் பிரதீப் அவதே கூறியுள்ளார்.
"வாராந்திர தரவுகளின் படி சி.எஃப்.ஆர் சமீபத்திய வாரங்களில் இன்னும் வெளிப்படையான சரிவைக் காட்டுகிறது. தற்போது தினசரி 13,000-14,000 பேர் மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல் அலைகளின் உச்சத்தில் இருக்கும் நிலைமையைப் போலவே, தினசரி 20,000 தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தொடக்கூடும்.
ஆனால் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாகவே இருக்கும். கடைசியாக ஆகஸ்ட் மாத இறுதியில் மற்றும் மீண்டும் செப்டம்பர் இறுதியில், ஒவ்வொரு நாளும் 200 முதல் 300 இறப்புகள் கணக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, 50 முதல் 60 இறப்புகள் வரை பதிவாகியுள்ளது" என்று மருத்துவர் பிரதீப் அவதே கூறினார்.
மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் மோசமாக தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை, பெரும்பாலும் இயற்கையில் லேசானவை என்பதற்கான சான்றுகளைச் கொடுக்கின்றன.
"தொற்றால் பதிப்பட்டோர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றன. ஆனால் உள்வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் லேசான அறிகுறிகள் உள்ளன" என்று புனேவின் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் தனஞ்சய் கெல்கர் கூறினார்.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், மருத்துவமனையில் பெரும்பாலான ஆக்ஸிஜனேற்ற படுக்கைகள் மற்றும் ஐ.சி.யுக்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் இப்போது, மிக மோசமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அவை குறைவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.