கோவிட்19 தடுப்பூசி: 50% இலக்கு கூட எட்டாத மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

Covid-19 vaccination Tamil Nadu: தமிழகத்தில், இதுவரை 5,32,605 அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 18- தேதியோடு 47.1 சதவீதம் சுகாதார பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியால் பயனடைந்து உள்ளனர்.

Covid-19 vaccination Tamil Nadu: தமிழகத்தில், இதுவரை 5,32,605 அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 18- தேதியோடு 47.1 சதவீதம் சுகாதார பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியால் பயனடைந்து உள்ளனர்.

author-image
WebDesk
New Update
India news in tamil Covid-19 vaccination Tamil Nadu, Punjab, Delhi lagging for 50% vaccination target

India news in tamil Covid-19 vaccination Tamil Nadu, Punjab, Delhi lagging for 50% vaccination target

India news in tamil:  கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுக்காக்கும் நடவடிக்கையாக, நாட்டின் பல்வேறு பகுதியில் களப்பணி ஆற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 1 கோடி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஆனால் வலுவான சுகாதார உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன பல மாநிலங்களும், சில யூனியன் பிரேதசங்களும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் மிக மோசமாக செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.  

Advertisment

முதல் கட்டமாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, 7 மாநிலங்களும் , சில யூனியன் பிரேதசங்களும், அதன் சுகாதர பணியாளர்களில் 50 சதவீதம் பேருக்கு கூட வழங்கவில்லை என மத்திய சுகாதர துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும், டெல்லி போன்ற யூனியன் பிரேதங்களும் அடங்கும்.  

சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தமிழகத்தில், இதுவரை 5,32,605 அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 18- தேதியோடு 47.1 சதவீதம் சுகாதார பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியால் பயனடைந்து உள்ளனர். அதே போல டெல்லியில் 2.78 லட்சம் பேருக்கும், பஞ்சாபில் 1.97 லட்ச பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் லடாக் (47.4 சதவீதம்), நாகாலாந்து (36.7 சதவீதம்), சண்டிகர் (35.9 சதவீதம்), புதுச்சேரி (27.5 சதவீதம்) போன்றவையும் அடங்கும். 

"தமிழ்நாடு,பஞ்சாப், டெல்லி போன்றவைகள் வலுவான சுகாதார உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளன. ஆனால் இவை ஏதும் இல்லாத சத்தீஸ்கர், தடுப்பூசி பாதுகாப்பு நடவடிக்கையில் 78 சதவீதத்தை அடைய உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு நடவடிக்கையில் சில மாநிலங்கள், திறம்பட திட்டமிட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில மாநில அரசாங்கங்களின் இயலாமையால், அந்த மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது" என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

தடுப்பூசி வழங்குவதில் தமிழகத்தை பொறுத்தவரை பிப்ரவரி 3 - ம் தேதியோடு 23.70 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பிப்ரவரி 10ம் தேதியோடு 30.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (.எம்.) தலைவர் மறுவதுவர்.ஜே ஏ ஜெயலால் கூறுகையில், "தமிழகத்தில் குறைந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது 'ஆச்சரியம்' அளிக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு இங்கு யாரும் தயக்கம் காட்டுவதில்லை. இருப்பினும், சுகாதாரப் பணியாளர்களுள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஒரு பிரிவாக 'நர்சிங்' பிரிவு உள்ளது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மருத்துவர்களின் சதவீதம் எதிர்பார்த்தை விட அதிகமாகவே உள்ளது.  நர்சிங் பிரிவில் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.   

சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதது பற்றி பஞ்சாபின் ஐ.எம்.ஏ மாநிலத் தலைவர் மருத்துவர் குல்தீப் அரோரா கூறுகையில், "சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று அவர்களை ஊக்கப்படுத்தாதது. இரண்டு மோசமான எதிர்வினை பற்றிய அச்சம். 

தடுப்பூசி எடுத்துக் கொள்ள நாங்கள் பல 'ஜூம்' சந்திப்புகளை நடத்தினோம். ஆனால்  மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போடுக் கொள்கிறார்கள். செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போன்ற பிற சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.

தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி அறிந்தவர்கள் பலர் உள்ளனர். வயதான மக்களிடமிருந்து நிறைய அழைப்புகளை பெறுகிறோம்.பொது மக்களுக்காக தடுப்பூசி வழங்க துவங்கியவுடன், மாநிலத்தில் தடுப்பூசி குறித்த ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கயும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார். 

டெல்லி மருத்துவ கவுன்சிலின் தலைவரான டாக்டர் அருண் குப்தா கூறுகையில்,  தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அது ஒரு பிரச்சினை அல்ல. டெல்லியின் தனியார் மருத்துவமனைகளில், நாங்கள் கிட்டத்தட்ட 100 சதவிகித்தை காண்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் நிர்வாக சிக்கல்கள் எதுவும் இல்லை.

தடுப்பூசி பாதுக்காப்பு நடவடிக்கை குறித்து அரசு மருத்துவமனைகளில் விழிப்புணர்வு மேற்கொண்டோம். தற்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களில் 100 சதவிகித பேரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். தடுப்பூசி குறித்து இன்னும் அதிக விழிப்புணர்வு தேவை" என்று கூறியுள்ளார். 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Covid 19 Vaccine Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: