ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் காங்கிரஸ் இளைஞர் அணி: முக்கிய நிர்வாகி கருத்து என்ன?

Rajasthan Congress student wing raises funds for Ram temple: ராஜஸ்தான் மாநிலத்தில் 15 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பள்ளிகள் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழங்களுக்கு சென்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது

India news in Tamil In Rajasthan Congress student wing raises funds for Ram temple

India news in Tamil: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் குழு மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் இணைந்து நிதி திரட்டி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் 15 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பள்ளிகள் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழங்களுக்கு சென்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்காக கொடியும் ‘ரீ 1 ராம் கே நாம்’ கோஷத்தையும் அந்த குழுவினர் தயார் செய்துள்ளனர்.

“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடவுள் ராம் பெயரில் பணம் சேகரிக்க பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களால் தான் இந்த நாட்டில் கொள்ளைச் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடவுளுக்கு பணம் தேவையில்லை, ஆனால் பக்தி தேவை என்ற செய்தியை அனுப்ப இந்த பிரச்சாரத்தை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் பக்திக்கு 1 ரூபாய் நன்கொடை அளித்தால், அது 1கோடி ரூபாய் நன்கொடை அளிப்பது போலவே நாங்கள் கருதுகின்றோம்

மேலும் மதத்தின் பெயரால் நாங்கள் அரசியல் செய்ய முற்படவில்லை. காங்கிரஸ் கட்சி என்பது அரசியலமைப்பின் படி செயல்படும் ஒரு கட்சி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராம் கோயில் என்ற பெயரில் நாட்டை உடைக்க முயற்சிக்கும் அந்த இனவாத சக்திகளுக்கு எங்கள் பிரச்சாரம் ஒரு செய்தியாக இருக்கும் ”என்று ராஜஸ்தான் மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) தலைவர் அபிஷேக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

“சேகரிக்கப்பட்ட தொகை பிரச்சாரத்தின் முடிவில் ராம் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். பாஜக பிரச்சாரத்திற்கு மாறாக, ராம் பகவான் இந்துக்களுக்கு அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் மட்டும் உரிய கடவுள் அல்ல இல்லை என்பதையும், அவர் முஸ்லிம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கும் முக்கியமானவர் என்ற செய்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதோடு ராம் பகவான் அனைவருக்கும் உரியவர், அவர் மீது நம்பிக்கை வைக்க எல்லா மதங்களுக்கும் சம உரிமை உண்டு” என்று ராஜஸ்தான் மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) செய்தி தொடர்பாளர் ரமேஷ் பாதி கூறியுள்ளார்.

மாணவர்கள் நடத்தும்இந்த பிரச்சரம் குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா கேட்ட போது, தான் அது குறித்து தெரிந்து, சரிபார்க்க உள்ளத்தாக குறிப்பிட்டுள்ளார்.

” மாணவர்கள் நடத்தும் இந்த பிரச்சாரத்தை பாஜக அரசியல் ஆக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அரசியல் லென்ஸ் மூலம் பிரச்சினையை பார்க்க முயற்சிக்கிறது, இது தேவையில்லை. அதோடு ராம் கோயில் மற்றும் 370 வது பிரிவு போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து சிறுபான்மையினரின் வாக்குகளை சேகரிக்க முயல்கிறார்கள். நன்கொடை பணம் பாஜகவால் சேகரிக்கப்படவில்லை, ஆனால் மக்கள் தானாக முன்வந்து ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்துள்ளனர்
”என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India news in tamil in rajasthan congress student wing raises funds for ram temple

Next Story
மறுக்கப்படும் கழிவறை வசதிகள்; சிரமத்திற்கு ஆளாகும் விவசாயிகள்!Metal spikes on road, barricades hit farmers’ access to water, toilets
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com