India news in Tamil: கேரளா மாநிலத்தை ஆளும் இடது சாரி கட்சியான எல்.டி.எஃப் பாஜகவுடன் கூட்டணி வைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகின்றது.எனவே பாஜக கூட்டணியில் இருந்த பாரத தர்ம ஜனசேனா கட்சியின் (பி.டி.ஜே.எஸ்) பொறுப்பாளர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மாநில காங்கிரஸ் கட்சி வழிநடத்தும் கூட்டணி கட்சிகளோடு இணையப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018 ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அதை ஆளும் இடது சாரி கட்சியான எல்.டி.எஃப் செயல் படுத்தியும் இருந்தது. எனவே பாஜகவுடன் கூட்டணியில் இணைய உள்ள ஆளும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று பாரத தர்ம ஜனசேனா கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
“அனைத்து வயதுடைய பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான பாரத தர்ம ஜனசேனா கட்சித் தொண்டர்கள் இணைந்து, போலீசார் தடுத்து நிறுத்திய போதும் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சி இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும் ஆளும் எல்.டி.எஃப் கட்சி ஆட்சியை தொடர்வதற்கும் பாஜக விரும்புகிறது. இந்துக்களின் உணர்வை புண் படுத்திய எல்.டி.எஃப் கட்சி ஆட்சியில் அமர்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள பாரத தர்ம ஜனசேனா கட்சியின் நிர்வாகி கோபகுமார் கூறியுள்ளார்.
இதுபற்றி கேரள பட்டியல் சமூக அமைப்பான புலய மகா சபையின் (கே.பி.எம்.எஸ்) முக்கிய தலைவர்களுள் ஒருவரான நீலகண்டன் கூறுகையில், “பாரத தர்ம ஜனசேனா கட்சி உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டத்தில் எங்களுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட பிஜேஎஸ் கட்சி எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யுடிஎஃப் கூட்டணியை ஆதரிக்கும். நாங்கள் ஏற்கனவே யுடிஎஃப் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எங்களுக்கு தொகுதி பங்கீடுவது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் எல்.டி.எஃப் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய பாஜக தலைவர்கள் தங்கள் கட்சியில் உள்ளவர்களை சமாதானம் செய்து வருகின்றது. எனவே தங்கக் கடத்தல் வழக்கில் பிஜேபி கட்சியினர் அமைதி காத்து வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பாஜக கட்சியினர் உரிய ஆதரவு அளிக்கவில்லை. அதோடு பாஜக கூட்டணியில் பி.டி.ஜே.எஸ் கட்சியினருக்கு முயக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. எனவே பல்வேறு மாவட்டத்தில் உள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகி வருவதாக பாரத தர்ம ஜனசேனா கட்சியில் இருந்து விளக்கியுள்ள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பி.டி.ஜே.எஸ் கட்சியின் தலைவர் துஷர் வெள்ளப்பள்ளி கூறுகையில், “அந்த பொறுப்பாளர்கள் நாடாளுமன்றக் கனவுகளுடன் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பி.டி.ஜே.எஸ் கட்சி ஒரு தெளிவான அரசியல் நோக்கம் கொண்ட கட்சி. அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (என்டிஎ) நாங்கள் தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.
பி.டி.ஜே.எஸ் கட்சி 2015 –ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பின்தங்கியுள்ள ஈசாவா இந்து சமூகதினாருக்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபலன யோகம் என்பர் உருவாக்கினார். அதன் புரவலராகவும், பொதுச் செயலாளராகவும், வெள்ளப்பள்ளி நடேசன் உள்ளார். 2016 –ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (என்டிஎ) இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் பெரும்பான்மையான வாக்குகளை அந்த கூட்டணிக்கு பெற்றும் தந்தது. அதோடு போட்டியிட்ட 37 இடங்களில் இருந்து 8 லட்சம் வாக்குகளையும் பெற்றது.
பி.டி.ஜே.எஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு மத்திய அரசில் முக்கிய பதவிகளை வழங்க பாஜக தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook