தமிழக நிலைமை என்ன? 5 மாநிலங்களில் மட்டும் 86% கொரோனா பாதிப்பு
new Covid cases in 24 hrs and 86% from 5 states: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் சுமார் 14,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில் 86 சதவீதம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளன.
new Covid cases in 24 hrs and 86% from 5 states: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் சுமார் 14,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில் 86 சதவீதம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளன.
India news in tamil: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் சுமார் 14,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில் 86 சதவீதம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளன. இந்த 5 மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 6,971 பேருக்கும், தமிழகத்தில் 452 பேருக்கும், கேரளாவில் 4,070 பேருக்கும், கர்நாடகாவில் 413 பேருக்கும் மற்றும் பஞ்சாபில் 348 பேருக்கும் புதிதாக தொற்று பரவியுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisment
தொற்று அதிகமாக பரவிவரும் பட்டியலில் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 83 பேர் கொரோனா தொற்றால் இறந்துந்துள்ளனர். இதில் 78.31 சதவீதம் மகாராஷ்டிரா (35) மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதோடு கேரளாவில் 15 பேரும் , பஞ்சாபில் 6 பேரும், சத்தீஸ்கரில் 5 பேரும் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 4 பேரும் இறந்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று திங்கள் கிழமையோடு 1,50,055 பேருக்கு தொற்று உள்ளதாக அறியப்பட்ட நிலையில், அதில் 1.36 சதவீதம் பேருக்கு தொற்று உள்ளது என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதோடு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு மாநிலங்களிலும், யூனியன் பிரேதேசங்களிலும் புதிய கொரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல கட்ட தடுப்பு நடவடிக்கைக்களை எடுக்க வேண்டும் என்று இந்த 5 மாநிலங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடிதம் வாயிலாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் நாட்டின் தொற்று பரவும் மொத்த விகிதம் 5.20 சதவீதமாக இருந்த நிலையில், தொற்று பரவும் வாராந்திர சராசரி 1.79 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று பரவும் வாராந்திர சராசரி அதிகமாக உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதன் தொற்று பரவும் வாராந்திர சராசரி 8.1 சதவீதம் ஆகும். அதோடு தொற்று பரவும் வாராந்திர சராசரி 4.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக அதிகரித்தும் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் கேரளா மாநிலம் உள்ளது(7.9 சதவீதம்).
இந்த நிலையில், ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விகிதத்தை அதிகரிக்கவும், அவற்றின் சோதனையை மேம்படுத்துமாறும் தொற்று அதிகமாக பரவி வரும் ஐந்து மாநிலங்களிடமும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு
அனைத்து நெகடிவ் ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவுகளும் கட்டாயமாக RT-PCR சோதனையால் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தொற்று அதிகமாக உள்ள மண்டலங்களிலும், மாவட்டங்களிலும் கடுமையான கண்காணிப்பு மற்றும்கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதோடு சோதனை மற்றும் மரபணு வரிசைமுறை மூலம் பிறழ்ந்த விகாரங்களையும் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil