Advertisment

பிரதமர் மோடி அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம்: இந்த வார இறுதியில் நிகழ வாய்ப்பு?

PM Modi’s Cabinet reshuffle later this week Tamil News: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையை விரிவாக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், அது இந்த வார இறுதியில் அல்லது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு பின் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
India news in tamil: PM Modi’s Cabinet reshuffle later this week

India news in tamil: கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 2-வது முறையாக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது. பாஜக அரசு 2-வது முறையாக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடந்துள்ள நிலையில் இதுவரை அமைச்சரவையில் எந்தவொரு பெரிய மாற்றம் செய்யப்படமால் இருந்தது.

Advertisment

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெற முடியும் என்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றின் போது அமச்சரவையின் செயல்பாடு மற்றும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்தியுள்ளார். இந்த கூட்டங்கள் பலவற்றில் பாஜக தலைவர் ஜே பி நாடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் நிலைமையை நிர்வகிப்பதில் அரசாங்கம் தோல்வியுற்றதாகக் கூறப்படுவதாலும், கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதாலும், பாஜகவின் உ.பி. மாநிலப் பிரிவு கொந்தளிப்பில் உள்ள நிலையில், பாஜக தலைமை ஒரு “சமநிலைப்படுத்தும் செயலில் அக்கறை கொண்டுள்ளது. இதனால் அமைச்சரவையில் குஜராத், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட பிற தேர்தல் நடக்கும் மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றங்களும் மறுசீரமைப்பு செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தவிர, ஏறக்குறைய இரண்டு டஜன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவுக்குள் நுழைந்த ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய பிரதேசத்தில் கட்சி ஆட்சிக்கு வர உதவியுள்ளார். மேலும் அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட சர்பானந்தா சோனோவால் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மத்திய பிரதேச மாநில சிவசேனா மற்றும் ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) ஆகிய இரு கூட்டணி கட்சிகள் கடந்த 2019 தேர்தலுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், பாஜக கூட்டணியில் உள்ளவர்களுக்கு அமைச்சர்கள் குழுவில் அதிக இடம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் கூட்டணியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருந்த ஜனதா தளம் (ஜே.டி.யு) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க விருப்பம் தெரிவித்திருந்தது. அதோடு லோக் ஜான்ஷக்தி கட்சி (எல்.ஜே.பி) தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ளது. எனவே இந்த இரு கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை மக்களவையில் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் எல்.ஜே.பி-யில் மோதல்கள் ஏற்பட்ட நிலையில், கட்சியில் இருந்து யாருக்கு அமைச்சரவையில் இடமளிக்கிறார்கள் என்பதில் நிச்சம் சுவாரஸ்யமாக இருக்கும். அதோடு பாஜகவின் உத்தரபிரதேச கூட்டணி கட்சியான அப்னா தளமும் அமைச்சரவையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Bjp Pm Modi India Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment