Advertisment

'மெஹுல் சோக்ஸியின் உரிமைகள் மதிக்கப்படும்' - டொமினிகா பிரதமர்

Rights of Mehul Choksi will be respected says Dominica PM Rooseveltt Skerrit Tamil News: "இந்திய குடிமகன் மெஹுல் சோக்ஸியின் உரிமைகள் மதிக்கப்படும் எனவும், எதிர்கால நடவடிக்கை குறித்து நீதிமன்றங்கள் முடிவு செய்யும் என்றும் டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
India news in tamil: Rights of Mehul Choksi will be respected says Dominica PM Rooseveltt Skerrit 

India news in tamil: இந்தியாவில் 13,500 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மெஹுல் சோக்ஸியை கடந்த மே 23 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து டொமினிக்காவிற்கு யாரோ கடத்தி சென்றதாக அவருடைய வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர்.

Advertisment

மேலும் ஆன்டிகுவாவில் உள்ள ஜாலி ஹார்பரில் இருந்து ஆன்டிகுவான் மற்றும் இந்தியர் போன்ற போலீஸ்காரர்களால் அவர் கடத்தப்பட்டு ஒரு படகில் டொமினிகாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

ஆனால் தனது காதலியுடன் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து தப்பித்த மெஹுல் சோக்ஸி, அண்டை தீவு நாடான டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியது.

டொமினிகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 'ரோசா மாஜிஸ்திரேட்' முன்னால் சோக்ஸி கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது வழக்கறிஞர்களால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த ரோசா மாஜிஸ்திரேட், சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும், அவர் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறினார். அதோடு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே இன்டர்போல் ரெட் கார்னர் அறிவிப்பு நிலுவையில் இருந்தது. இதனால், சோக்ஸியை நாடு கடத்த முயற்சிக்க இந்திய அதிகாரிகள் குழு டொமினிகாவுக்குச் சென்றிருந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை ஒத்திவைத்த பின்னர் அந்த குழு நாடு திரும்பியது.

இந்த நிலையில், "இந்திய குடிமகன் மெஹுல் சோக்ஸியின் உரிமைகள் மதிக்கப்படும் எனவும், எதிர்கால நடவடிக்கை குறித்து நீதிமன்றங்கள் முடிவு செய்யும் என்றும் டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் கூறியுள்ளார்.

பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகமான ‘நேச்சர்லைஸ்’ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்திய குடிமகனுடனான விஷயம் குறித்து நீதிமன்றங்கள் தான் முடிவு செய்யும். பண்புள்ளவருக்கு என்ன நடக்கிறது என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும். மேலும் நீதிமன்ற செயல்முறைக்கு செல்ல நாங்கள் அனுமதிப்போம். இந்த விஷயங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிட நான் விரும்பவில்லை.

இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அவரது உரிமைகள் மதிக்கப்படும். அவருக்கு என்ன நடக்கும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். இந்த விஷயம் ஆன்டிகுவா மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையும் எங்களுக்கு இல்லை, நாங்கள் எங்கள் சொந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக எங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

India Mehul Choksi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment