பிரதமரை தாக்கி பேசிய உதயநிதி; எதிர்ப்பு தெரிவித்த சுஷ்மா, ஜெட்லியின் மகள்கள்

Udhayanidhi Stalin targets PM; Swaraj, Jaitley daughters protest Tamil News: உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

India news in tamil Udhayanidhi Stalin targets PM; Swaraj, Jaitley daughters protest

India news in tamil: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பஜவின் சார்பாக போட்டியிடும், பாஜக மாநிலத் தலைவர் எல் முருகனுக்காக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது திமுக – வை சாடி பேசிய பிரதமர், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்க தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினை குறுக்குவழியை பின்பற்றுபவர் என்று குற்றம் சாட்டியாதாக உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் “நான் குறுக்குவழியை கடைபிடிக்கிறேன் என்று யார் சொல்கிறது என்று பார்த்தீர்களா?, மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது பலரை எவ்வாறு ஓரங்கட்டினார் என்பது எங்களுக்குத் தெரியும். அது குறித்த பட்டியல் என்னிடம் உள்ளது ” என்றுள்ளார்.

பின்னர் பாஜகவின் மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ​​(சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தவர்) சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி போன்றோர்களின் பெயர்களை குறிப்பிட்ட பேசிய உதயநிதி, “சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி போன்றோருக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனாலேயே அவர்கள் இறந்தார்கள். அதற்கு பிரதமர் மோடியே காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

உதயநிதியின் இந்த உரையின் வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட நிலையில், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜ் உதயநிதியின் இந்த பேச்சுக்கான தனது எதிர்ப்பை ட்வீட்டர் வாயிலாக பதிவு செய்தார். அதில் “உதயநிதி ஜி, தயவுசெய்து உங்கள் வாக்கெடுப்பு பிரச்சாரத்திற்கு என் தாயின் நினைவலைகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கூற்றுகள் தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி ஜி எனது தாய்க்கு மிகுந்த மரியாதையையும் கவுரவத்தையும் வழங்கியவர். எங்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டபோது, பிரதமரும் கட்சியும் எங்களுடன் துணை நின்றன. தற்போது உங்கள் வேற்று அறிக்கையால் எங்களை காயப்படுத்தியுள்ளீர்கள்”என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜகவின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அன்று மாலையில், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியின் மகள் சோனாலி ஜெட்லி பக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், “உதயஸ்டலின் ஜி, உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் பொய் சொல்லும் போதும், என் தந்தையின் நினைவை மதிக்காமல் பேசும்போதும் நான் அமைதியாக இருக்க மாட்டேன். எனது அப்பாவும், பிரதமர் மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறப்பு பிணைப்பை பகிர்ந்து கொண்டவர்கள். அத்தகைய நட்பை அறிந்து கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி, முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் போல் பிரதமர் மோடியை பார்த்து தான் பயப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் “நான் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் பேரன்” என்று கூறி அங்கிருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Web Title: India news in tamil udhayanidhi stalin targets pm swaraj jaitley daughters protest

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express