Advertisment

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு: தனியார்மய பட்டியலில் இடம்பிடிக்கும் 3 வங்கிகள்?

Union budget 2021-22 Tamil news: பட்ஜெட் கூட்டத்திலேயே இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு தேவையான சட்டமன்ற திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

author-image
WebDesk
New Update
India news in Tamil union budget 2021 which are 3 PSU banks likely to be privatised

India news in Tamil : 2021-22 -ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கள் கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். சுமார் 1.50 மணி நேரம் அவர் ஆற்றிய உரையில் மாநிலங்கள் பொறுப்பில் உள்ள இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த திட்டத்தில், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தெரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது. 

Advertisment

அனில் குப்தா - துணைத் தலைவர் மற்றும் துறைத் தலைவர், நிதித்துறை மதிப்பீடுகள், .சி.ஆர்., இது பற்றி கூறுகையில், "பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகளை தனியார்மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனேவே வங்கிகளை இணைக்கும் திட்டத்தில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய வங்கி மற்றும் யூகோ (UCO) வங்கி ஆகியவை பிசிஏ (உடனடி-திருத்த நடவடிக்கை) இன் கீழ் உள்ளன. ஏனென்றால் இந்த மூன்று வங்கிகளின் சந்தை மதிப்பு முற்றிலும் குறைந்துள்ளன. அதோடு பெரும் இழப்புகளையும் சந்த்தித்துள்ளன. அதோடு இந்த வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே இந்த வங்கிகளும் தனியார்மயமாக்கலுக்கு வழங்க பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இணைக்கப்பட்ட ஐந்து வங்கிகளையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியையும் தவிர, ஆறு பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அந்த ஆறு வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூகோ வங்கி ஆகியவை அடங்கும். 

"பாங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் மயமாக்க படுவதை அரசு கருத்தில் கொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால் அது மிகப் பெரிய வங்கி. எனவே  அரசு முதலில் சிறிய வங்கிகளை சோதிக்க விரும்பலாம்," என்றும் குப்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"இணைக்கப்படாத சிறிய வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த வங்கிகள் அளவில் சிறியதாகவும், அரசிற்கு லாபம் ஈட்டும் வகையிலும் இல்லை. இந்த சிறிய வங்கிகளை சோதனை செய்யும் முடிவு சரியானது என்றும், இது எதிர்காலத்தில் பிற பெரிய பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான ஒரு சோதனை என்றும் நம்புகின்றோம்" என்று ஜே.எம் நிதி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள ஒரு குறிப்பில், "இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணியை அடைய கடினமாக இருக்கலாம், ஆனால் வெற்றிகரமாக இருந்தால் அதிக மற்ற வங்கிகளையும் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்கும். அதோடு இந்த வங்கிகளை வாங்குவதற்கு முதலீட்டார்கள் ஆர்வம் காட்டுவதில்லை" என்று கூறியுள்ளது. 

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நிதியமைச்சர் அளித்த பேட்டியில், "அரசு இன்னும் பல பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலு

விரும்புகிறது. ஆனால் அவை செயல்பாட்டு ரீதியாக வலுவாகவும், தொழில் ரீதியாக முறையாகவும் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் வளர்ந்து வரும் இந்தியாவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளன என்று கூறியுள்ளார். 

அதோடு இந்த இயங்க முடியாத நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளை, திறம்பட இயக்க முதலீட்டாளர்கள் இருக்கையில்,  நாம் ஏன் வரி பணத்தை விரையம் செய்ய வேண்டும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

பட்ஜெட் கூட்டத்திலேயே இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு தேவையான சட்டமன்ற திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

Nirmala Sitharaman Union Budget 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment